பூவை செங்குட்டுவன்

பூவை செங்குட்டுவன்
பிறப்புமுருகவேல் காந்தி
கீழப்பூங்குடி சிவகங்கை, தமிழ்நாடு,  இந்தியா
தொழில்கவிஞர்
பாடலாசிரியர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், திரைப்பட வசனகர்த்தா, இலக்கியவாதி
குறிப்பிடத்தக்க விருதுகள்கலைமாமணி விருது, 'கலைச்செல்வம்', 'கவிமன்னர்', 'கண்ணதாசன் விருது' 
பெற்றோர்ராமையா அம்பலம்-லட்சுமி அம்மாள்

பூவை செங்குட்டுவன் (Poovai Senkuttuvan) தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். இவர் பக்திப் பாடல்கள் எழுதுவதில் சிறந்தவர்.[1] 1967ஆம் ஆண்டு முதல் ஆயிரக்கணக்கான திரைப்பாடல்கள், 4000இற்கும் மேற்பட்ட தனிப்பாடல்கள், 2 திரைப்படங்களுக்கு கதை, 3 திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் ஆகியவற்றை எழுதியவர். மேலும் 15இற்கும் மேற்பட்ட மேடை நாடகங்கள், 30இற்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்கள், வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சித் தொடர்கள் என பல்துறையில் பங்காற்றியவராவார்.

வாழ்க்கைக் குறிப்பு

பூவை செங்குட்டுவன் சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி என்னும் ஊரில் ராமையா அம்பலம்-லட்சுமி அம்மாள் இணையருக்கு பிறந்தார்.

பக்திப் பாடல்கள்

'தேரழந்தூர் சகோதரிகள் ' என்ற அறிமுகத்தோடு ஆரம்ப காலத்தில் அழைக்கப்பட்டு பின்னாளில் சூலமங்கலம் சகோதரிகளாக புகழ் பெற்றவர்களுக்காக பல பக்திப் பாடல்களை இயற்றியவர் பூவை செங்குட்டுவன்.

விருதுகள்

  • கலைமாமணி விருது
  • கண்ணதாசன் விருது
  • 2010- கவிஞர்கள் திருநாள் விருது[2]
  • 2021- மகாகவி பாரதியார் விருது[3]

இயற்றிய சில திரைப்படப் பாடல்கள்

மேற்கோள்கள்

  1. "திரையிசைப் பாடல்களில் கவிதை நயம்".
  2. "கவிஞர்கள் திருநாள் விருது - 2010".
  3. "திருவள்ளுவர் விருது, சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் அறிவிப்பு". Dinamani. Retrieved 2022-07-29.
  4. "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்.. – கவிஞர் பூவை செங்குட்டுவன்". வல்லமை (in அமெரிக்க ஆங்கிலம்). 2014-01-02. Retrieved 2022-07-29.


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya