பூ. ம. செங்குட்டுவன்
பூ. ம. செங்குட்டுவன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், மருங்காபுரி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் தமிழ் 2013 அக்டோபர் மாதம் அதிமுகவில் இணைந்தார், பின்னர் 2021 பிப்ரவரி 21 ஆம் நாள் மீண்டும் திமுகவில் இணைந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 2021 ஜூலை 2 ஆம் நாள் உயிரிழந்தார். இளமைக் காலம்திருச்சி மாவட்டம், மணப்பாறையையடுத்த மருங்காபுரி ஒன்றியம் வேலக்குறிச்சியில் பூதன் (எ) மலையாண்டி மற்றும் நாச்சியம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக 1941 ஜூன் 20 ஆம் நாள் பிறந்தார்.[3] முதுகலை தமிழ் இலக்கியம் படித்தார். மிசா வழக்கில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையிலிருந்தார். மேலும் திமுக கட்சி சார்பில் சுமார் 60 முறை சிறை சென்றவர். சொத்துக் குவிப்பு வழக்கு1996 முதல் 2001 ஆண்டு தமிழக அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சராக இவர் பதவி வகித்தார்.[4] இவர் அமைச்சரான காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.81,42,977 மதிப்பில் சொத்து குவித்ததாக, 2003 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு இவரது இரண்டு மகன்கள்(பன்னீர்செல்வம், சக்திவேல்), மகள்(மீனாட்சி), மருமகன்(ராஜலிங்கம்), தம்பி மகள்(வள்ளி) ஆகியோர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். திருச்சி ஊழல் தடுப்பு தனி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. பின்னர் இந்த வழக்கு முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு 2023 அக்டோபரில் மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia