பெங்களூர் நகரத் தொடருந்து நிலையம்
பெங்களூர் நகரத் தொடருந்து நிலையம், கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் உள்ளது. இது பெங்களூர் நகரத்தின் ரயில் போக்குவரத்துக்கான நிலையமாகும். இது தென்மேற்கு ரயில்வேயின் முக்கிய ரயில் நிலையம் ஆகும். இது 10 நடைமேடைகளைக் கொண்டது. இந்திய அளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் நிலையங்களில் இதுவும் ஒன்று. நிலையம்இதில் உள்ள 1 முதல் 7 வரையிலான நடைமேடைகளில் சென்னை, சேலம் ரயில் வழித்தடங்களின் ரயில்கள் நிற்கின்றன. 8,9,10 ஆகிய நடைமேடைகளில் ஹூப்ளியில் தொடங்கி யஷ்வந்த்பூர் வழியாக வரும் ரயில்கள் நிற்கின்றன. 1 முதல் 4 வரையிலான நடைமேடைகளுக்கு வரும் ரயில்கள் பெங்களூருடன் நிற்கின்றன. 5 முதல் 10 வரையிலான நடைமேடைகளுக்கு வரும் ரயில்கள் மைசூர் வரை பயணிக்கின்றன. ஒவ்வொரு நாளும் 88 ரயில்கள் வந்து செல்கின்றன. இவற்றில் 63 ரயில்கள் விரைவுவண்டி வகையைச் சேர்ந்தவை. சராசரியாக ஒவ்வொரு நாளும் 220,000 பயணிகள் வந்து செல்கின்றனர்.[1] சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia