பெஞ்சமின் பியாரி பால்
பெஞ்சமின் பியாரி பால் (Benjamin Peary Pal) இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் இயக்குநராக இருந்தவர். கோதுமை மரபியல், மற்றும் கலப்பு ஆய்வில் முன்னணியில் இருந்தார்.[2] வாழ்க்கைக் குறிப்புஇவர் 1906-ஆம் ஆண்டு மே-26-ஆல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முகுந்த்பூரில் பிறந்தவர். இவரது தந்தை மருத்துவர் ஆவார். பியாரி பாலும் தந்தையுடன் தோட்டத்தைக் கவனிப்பதுடன் நில்லாமல் தாவரங்கள் குறித்த தனது அறிவையும் புத்தகங்கள் மூலம் வளர்த்துக் கொண்டார். பால் ரங்கூன் பல்கலைக்கழகத்தில் அறிவியலில் இளங்கலை, முதுகலைப் பட்டங்கள் பெற்றார். 1929-இல் கோதுமை தொடர்பான ஆராய்ச்சிக்காக கேம்பிரிச்சுப் பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.[3] 1933-ல் புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வுப் பணி அவருக்குக் கிடைத்தது. கோதுமைப் பயிரைத் தாக்கிய பூஞ்சை நோயைக் கட்டுப்படுத்த, புது வகை கோதுமை பயிரைக் கண்டறிய முனைந்தார். என்பி 700, 800 வகைக் கோதுமைகளை பிடாரி பால் உருவாக்கியதன் மூலம் இவருக்கு பரவலாக பாராட்டுகள் கிடைத்தது. 1965-ல் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார். 40-க்கும் மேற்பட்ட உரோசா ரகங்களையும் உருவாக்கியுள்ளார்.[4] 1987-ல் இந்திய அரசு இவருக்கு பத்மவிபூசன் விருதளித்தது.[1][5][6][7] 1989-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-இல் காலமானார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia