பெட்ட குறும்பர்

பெட்ட குறும்பர் தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும் வாழும் பழங்குடி இனத்தோர். இவ்வினத்தார் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர்ப் பகுதியில் வாழ்கின்றனர். பெட்ட எனின் இவர்தம் மொழியில் மலை என்று பொருள். இவர்கள் குறுமன், குறும்பன், குறுபன் முதலிய பல பெயர்களால் அழைக்கப்படுகின்றனர்.

இம்மக்கள் தாம் வாழுமிடத்தை பாடி என்று அழைக்கின்றனர். இவர்களது குடிசைகள் மூங்கிலால் கட்டப்பட்டு இருக்கும். குடிசைகட்கு நடுவில் பெரிய குடிசையொன்றும் இருக்கும். இதற்கு வெளியில் எப்போதும் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும்.

முதுமலை, தெப்பக்காடு பகுதிகளில் வாழும் பெட்ட குறும்பர்கள் யானைகளைப் பழக்குவதில் தேர்ந்தவர்கள். தேன் எடுப்பதும் மீன் பிடிப்பதும் இவர்தம் தொழில். நெருப்பு மூட்டி அதனைத் தெய்வமாகப் போற்றுகின்றனர். பெட்ட குறும்பர் பேசும் மொழி பெட்ட குறும்பர் எனப்படுகிறது. இது தென்திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த தனித் திராவிட மொழியாகும். பேராசியர் எமனோ, கமில் சுவலபில் ஆகியோரும் தத்தம் நூல்களில் இக்கருத்தையே குறிப்பிட்டுள்ளனர்.

பெட்டக் குறும்பர் இன மக்களிடையே மொத்தம் 16 பெயர்கள் தாம் உண்டு. அவை மாண்பன், மாறன், பொம்மன் முதலான எட்டு ஆண் பெயர்களும் மாண்பி, மாரி, பொம்மி முதலான எட்டு பெண் பெயர்களும் ஆகும்.

இறந்தோரை இவ்வின மக்கள் புதைக்கின்றனர். ஆண், பெண் இருபாலரும் இறந்தவர்களைக் கொண்டு செல்கையில் இடுகாட்டுக்குச் செல்வர். இறந்தவரின் வீட்டார் பின்னர் வேறு இடத்தில் குடியேறுவர்.

வெளி இணைப்புகள்

  • முனைவர் சு.சக்திவேல், தமிழ்நாட்டுப் பழங்குடி மக்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108, முதற்பதிப்பு: 1998
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya