பெண்களின் உரிமைகள்![]() பெண்களின் உரிமைகள் என்பது அனைத்து வயதிலுமுள்ள பெண்கள், குழந்தை அனைவருக்குமான உரிமைகளையும் சுதந்திரங்களையும் குறிக்கிறது. இந்த உரிமைகள் நிறுவனப்படுத்தப்படாது இருக்கலாம். சட்டம் , உள்ளூர் பழக்கங்கள், சமூகக் கட்டுப்பாடுகளால் தவிர்க்கப்பட்டோ மறுக்கப்பட்டோ இருக்கலாம். இந்த உரிமைகளும் சுதந்திரங்களும் ஆண்களை உள்ளடக்கிய மனித உரிமைகளின் விரிவான வரைவிலக்கணங்களிலிருந்து பிரித்து தனியே தொகுப்பது தேவையாகிறது; ஆண்களுக்கு இயல்பாக கொடுக்கப்படும் உரிமைகள் கூட பெண்களுக்கு மறுக்கப்படுகின்றன. தன்னார்வலர்கள் சமூகத்தினால் பெண்களின் உரிமைகள் காலம் காலமாகவே புறக்கணிக்கப்பட்டு வருவதையும் பெண்கள் இந்த உரிமைகளைப் பெற ஓர் எதிர் சாய்நிலை அமைந்துள்ளதையும் சுட்டுகின்றனர்.[1] பெண்களின் உரிமைகள் என்பது பாலியல் வன்முறைகளிலிருந்து விடுபடுதல், வாக்குரிமை, பொது நிறுவனங்களில் வேலை செய்தல், குடும்ப உறவில் பெண்களின் உரிமை, சமமான ஊதியம் அல்லது சரியான ஊதியம் பெறுவது, குழந்தை பிறப்பு உரிமைகள், சொத்துரிமை, கல்வி உரிமை ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.[2] வரலாறுபழமையான வராலாறுமெசொப்பொத்தேமியாபழங்கால சுமேரியாவில் பெண்கள் விற்பனை,வாங்கல் [3] மற்றும் வாரிசு சொத்துரிமை போன்றவற்றில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்கள் வணிகத்திலும் ஈடுபட்டு வந்துள்ளனர்[3]. மேலும் அவர்களின் சாட்சியங்களை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.[3] இருந்த போதிலும் ஏதேனும் ஒரு சிறிய பிரச்சினைகள் என்றாலும் அதனைக் காரணம் காட்டி கணவன் மனைவியை திருமண முறிவு செய்யும் நடைமுறை இருந்து வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அவவாறு திருமண முறிவு பெற்ற கணவன் மற்றொரு திருமணம் செய்யவும் அனுமதி இருந்தது. இன்னானா என்ற பெண் தெய்வ வழிபாடு பரவாலாக இருந்துள்ளது.[4] ஒரு கணவன் எந்த சூழ்நிலையிலும் தனது மனைவியை விவாகரத்து செய்யலாம் என பழங்கால பாபேல் சட்டம் கூறுகின்றது.[4] ஆனால் அந்தப் பெண்ணிடமிருந்து பெற்ற அனைத்து சொத்துக்க்களையும் அவரிடமே திருப்பித் தர வேண்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட தொகையை அபராதமாக செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது..[4]:140 பால்வினைத் தொழில் போன்ற நடைமுறைகளில் ஈடுபடக்கூடிய கணவனிடமிருந்தும் ஒரு பெண் விவாகரத்துப் பெறுவதற்கும் இதே நடைமுறைகளை மனைவியும் பின்பற்றலாம் எனப் பெரும்பாலான சட்டங்களில் உள்ளது.[4]:140 சில பாபிலோன் சட்டங்களும் , அசிரியா சட்டங்களும் ஆண், பெண் இருபாலர்க்கும் சமமான அபராதத் தொகையினையே நிர்ணயம் செய்துள்ளது.[4] பெரும்பாலான கிழக்கு செமிடிக் நாடுகளின் தெய்வங்கள் ஆண் கடவுளாகவே இருந்துள்ளன.[4]:179 பழங்கால எகிப்தில் ஆண்களுக்கு நிகரான சட்டங்கள் தான் பெண்களுக்கும் இருந்தன. ஆனால் அவை சமூக வகுப்பு வாரியாக இருந்தன, தாயினுடைய சொத்துக்கள் அவர்களின் மகளுக்குச் சென்றன. மேலும் ஒரு பெண்ணுடைய சொத்துக்களை அவர்களே நிர்வகித்து வந்தனர். பழங்கால எகிப்தில் பெண்கள் விற்பனை,வாங்கல், ஒப்பந்தம் போன்றவற்றில் ஈடுபடவும் அவர்கள் நீதிமன்றங்களில் சாட்சிகள் கூறவும் அவர்களுக்கு உரிமைகள் இருந்தன. மேலும் குழந்தைகளை தத்தெடுக்கும் உரிமைகளும் இருந்தன.[5] வேதகாலத்தில் ஆண்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து உரிமைகளும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்தன.[6][7] பழங்கால இலக்கண அறிஞர்களாக பதஞ்சலி, கத்யாயனா போன்றவர்கள் அறியப்படுவதன் மூலம் முற்கால வேதகாலத்தில் பெண்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்துள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது.[8][9] இருக்கு வேதம் முதிர் கன்னிகள் தங்களுக்குப் பிடித்தமான ஆண்களை தேர்வு செய்யும் சுயம்வரம் போன்றன இருந்ததாகவும் உடனுறைபு வாழ்க்கையான களவு மணம் ஆகியவை இருந்ததாகவும் கூறப்படுகிறது.[10] பழங்கால கிரேக்க நாடுகளின் நகர அரசுகளில் பெண்களின் அரசியல் மற்றும் சம உரிமை பெறுவதில் பின்தங்கியிருந்த போதிலும் கி மு480 வரை பெரும்பாலான உரிமைகளில் சம உரிமை பெற்று இருந்தனர்.[11] போர்லாண்ட் டெல்பி, தெசாலி, மெகரா, எசுபார்த்தா போன்ற இடங்களில் பெண்கள் சொந்தமாக நிலங்கள் வைத்திருந்ததாக பதிவுகள் கூறுகின்றன.[12] இருந்த போதிலும் தொன்மைக்காலத்திற்குப் (கி.மு 480) பிறகு பெண்களுக்கான உரிமைகள் குறைக்கப்பட்டு சட்டம் இயற்றப்பட்டன.[11] பொதுவாக மறுக்கப்படும் மகளிர் உரிமைகள்
கல்வி பெற உரிமை
இந்த உரிமைகளும் சுதந்திரங்களும் பெற மகளிரும் அவர்தம் ஆதரவாளர்களும் போராடி வந்துள்ளனர்; சில இடங்களில் சம உரிமை வேண்டி இன்னமும் போராடி வருகின்றனர்.[13] பன்னாட்டு மற்றும் மண்டல சட்டங்கள்மகளிருக்கெதிரான அனைத்து பாகுபாட்டையும் அகற்ற பொதுவிணக்க உடன்பாடுபெண்கள் போற்றும் இருபால் சமத்துவம் ![]()
1948ஆம் ஆண்டு கைக்கொள்ளப்பட்ட அனைவருக்குமான மனித உரிமைகள் சாற்றுரை "ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை" வழங்குவதை உள்ளடக்கியுள்ளது.[14] இதனைத் தழுவி 1979ஆம் ஆண்டு ஐ.நாவின் பொது அவை மகளிருக்கெதிரான அனைத்து பாகுபாட்டையும் அகற் பொதுவிணக்க உடன்பாட்டை (CEDAW) நிறைவேற்றியது. பன்னாட்டு மகளிருக்கான உரிமைச் சட்டம் என விவரிக்கப்பட்ட இந்த உடன்பாடு செப்டம்பர் 3, 1981 அன்று செயலாக்கத்திற்கு வந்தது. வளர்ச்சியடைந்த நாடுகளில் அமெரிக்க ஐக்கிய நாடு மட்டுமே இந்த உடன்பாட்டை இன்னும் செயலாக்கத்திற்கு கொண்டு வரவில்லை. இந்த உடன்பாடு பெண்கள் பாகுபடுத்தப்படுவதை இவ்வாறு வரையறுத்துள்ளது:
இதன் தமிழாக்கம்:
இந்த உடன்பாடு ஓர் செயலாக்கத் திட்டத்தினையும் முன்வைத்துள்ளது. இதனையொட்டி உடன்பாட்டில் ஒப்பிட்ட நாடுகள் தங்கள் நாட்டு சட்டங்களில் இருபால் சமத்துவம் இடம் பெறுமாறு செய்ய வேண்டும்;பாகுபாடு ஏற்படுத்தும் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும்; மகளிருக்கெதிரான பாகுபாட்டினை அகற்றிட புதுச்சட்டங்கள் இயற்ற வேண்டும். இத்தகைய பாகுபாட்டினை அகற்றிட உறுதி செய்யும் வகையில் பொது அமைப்புகளையும் நீதி அமைப்புகளையும் நிறுவிட வேண்டும். தனிநபர்கள்,நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள் மகளிருக்கெதிரான வகையில் பாகுபாடு காட்டுவதை கண்காணித்து அவற்றை அகற்றிட செயலாற்றிட வேண்டும். மபுடோ நெறிமுறைசூலை 11,2003 அன்று மொசாம்பிக்கின் மபுடோவில் நடந்த இரண்டாவது ஆபிரிக்க ஒன்றிய மாநாட்டில் மபுடோ நெறிமுறை என்று பரவலாக அறியப்படும் ஆபிரிக்க மகளிருக்கான உரிமைகள் மற்றும் மனித உரிமைகளுக்கான ஆபிரிக்க உரிமைமுறியின் நெறிமுறை நிறைவேற்றப்பட்டது.[15] ஆப்பிரிக்க ஒன்றியத்தில் தேவைப்பட்ட 15 உறுப்பினர் நாடுகள் செயலாக்கிய நிலையில் நவம்பர் 25,2005 அன்று நடப்பிற்கு வந்தது.[16] இந்த நெறிமுறை பெண்களுக்கு அரசியலில் ஈடுபட,சமூக மற்றும் அரசியல் சமத்துவம், கருத்தரிப்பு சுதந்திரம் மற்றும் தங்கள் பாலுறுப்பு மாற்றத்திற்கு முடிவு காணல் என முழுமையான உரிமைகளை உறுதிப்படுத்துகிறது.[17] இவற்றையும் பார்க்கசான்றுகள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia