பென்சோடிரைகுளோரைடு
|
பெயர்கள்
|
ஐயூபிஏசி பெயர்
(டிரைகுளோரோமெத்தில்)பென்சீன்
|
வேறு பெயர்கள்
தொலுயீன் டிரைகுளோரைடு பீனைல் குளோரோபார்ம் ஆல்பா, ஆல்பா, ஆல்பா-டிரைகுளோரோதொலுயீன்
|
இனங்காட்டிகள்
|
|
98-07-7 Y
|
ChemSpider
|
7089 N 13882366 N
|
InChI=1S/C7H5Cl3/c8-7(9,10)6-4-2-1-3-5-6/h1-5H YKey: XEMRAKSQROQPBR-UHFFFAOYSA-N Y
|
யேமல் -3D படிமங்கள்
|
Image
|
KEGG
|
C19166 Y
|
பப்கெம்
|
7367
|
வே.ந.வி.ப எண்
|
XT9275000
|
|
UNII
|
U62VHG99AM Y
|
பண்புகள்
|
|
C7H5Cl3
|
வாய்ப்பாட்டு எடை
|
195.48
|
தோற்றம்
|
தெளிவான நீர்மம்
|
அடர்த்தி
|
1.3756 கி/மி.லி
|
உருகுநிலை
|
−5.0 °C (23.0 °F; 268.1 K)
|
கொதிநிலை
|
220.8 °C (429.4 °F; 493.9 K)
|
|
0.05 கி/லி
|
கரைதிறன்
|
கரிமக் கரைப்பான்கள்
|
தீங்குகள்
|
R-சொற்றொடர்கள்
|
R45 R22 R23 R37/38 R41
|
S-சொற்றொடர்கள்
|
S53 S45
|
தீப்பற்றும் வெப்பநிலை
|
97.22 °C (207.00 °F; 370.37 K)
|
Autoignition temperature
|
420 °C (788 °F; 693 K)
|
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
|
|
|
பென்சோடிரைகுளோரைடு (Benzotrichloride) என்பது C6H5CCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பென்சோமுக்குளோரைடு, முக்குளோரோதொலுயீன், டிரைகுளோரோதொலுயீன் போன்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. சாயங்கள் தயாரிக்கும் தொழிலில் ஒர் இடைநிலைப் பொருளாக பென்சோடிரைகுளோரைடு முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது [1][2][3].
அமெரிக்காவில் இச்சேர்மத்தை அதிக தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருள் என்று வகைப்படுத்தியுள்ளார்கள். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பென்சோடிரைகுளோரைடு தயாரிப்பது, சேமிப்பது, பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் அங்கு கட்டுப்படுத்தப்படுகின்றன [4].
தயாரிப்பு
ஒளி அல்லது டைபென்சாயில் பெராக்சைடு போன்ற இயங்குறுப்பு தொடக்கி வினையூக்கியாகச் செயல்பட , தொலுயீனை தனியுறுப்பு குளோரினேற்ற வினைக்கு உட்படுத்தினால் பென்சோடிரைகுளோரைடு உருவாகிறது. இவ்வினையில் இரண்டு இடைநிலை வேதிப்பொருட்கள் உருவாவதாக அறியப்படுகின்றன.
C6H5CH3 + Cl2 → C6H5CH2Cl + HCl
C6H5CH2Cl + Cl2 → C6H5CHCl2 + HCl
C6H5CHCl2 + Cl2 → C6H5CCl3 + HCl
பயன்கள்
பென்சோடிரைகுளோரைடு ஒரு பகுதியாக நீராற்பகுக்கப்பட்டு பென்சாயில் குளோரைடு உருவாகிறது :[1]
- C6H5CCl3 + H2O → C6H5C(O)Cl + 2 HCl.
பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பதற்கு உதவும் முன்னோடிச் சேர்மமான பென்சோடிரைபுளோரைடாகவும் இச்சேர்மத்தை மாற்றிமுடியும் :[5]
- C6H5CCl3 + 3 KF → C6H5CF3 + 3 KCl.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Rossberg, Manfred; Lendle, Wilhelm; Pfleiderer, Gerhard; Tögel, Adolf; Dreher, Eberhard-Ludwig; Langer, Ernst; Rassaerts, Heinz; Kleinschmidt, Peter et al. (2006). "Chlorinated Hydrocarbons". Ullmann's Encyclopedia of Industrial Chemistry: 139. doi:10.1002/14356007.a06_233.pub2.
- ↑ Merck Index, 11th Edition, 1120.
- ↑ Benzotrichloride Data page at Inchem.org
- ↑ 40 C.F.R.: Appendix A to Part 355—The List of Extremely Hazardous Substances and Their Threshold Planning Quantities (July 1, 2008 ). Government Printing Office. http://edocket.access.gpo.gov/cfr_2008/julqtr/pdf/40cfr355AppA.pdf. பார்த்த நாள்: October 29, 2011.
- ↑ Bonath, B.; Förtsch, B.; Saemann, R. (1966). "Kinetische Untersuchung einer Seitenkettenchlorierung unter Verwendung eines Analogcomputers". Chemie Ingenieur Technik 38 (7): 739–742. doi:10.1002/cite.330380711.