பெரிணி சிவதாண்டவம்![]() பெரிணி சிவதாண்டவம் அல்லது பெரிணி தாண்டவம் என்பது தெலங்காணாவின் பழமையான நடன வடிவமாகும். இது சமீப காலத்தில் புத்துயிர் பெற்றுள்ளது. காக்கத்தியர் வம்ச ஆட்சியின் போது இது செழித்தது.[1] இந்துக் கடவுளான சிவபெருமானின் நினைவாக பெரிணி நிகழ்த்தப்படுகிறது. மேலும் இது பண்டைய காலங்களில் வீரர்கள் போருக்குச் செல்வதற்கு முன்பு நிகழ்த்தப்பட்டதாக நம்பப்படுகிறது. நடராஜ ராமகிருஷ்ணா ராமப்பா கோயிலில் உள்ள பழைய கையெழுத்துப் பிரதிகள் மற்றும் சிற்பங்களைப் படித்து இக்கலை வடிவம் மீட்டெடுக்கப்பட்டது.[1][2] நடனம்பெரிணி சிவ தாண்டவம் பொதுவாக ஆண்களால் ஆடும் நடன வடிவமாகும். இது 'போர்வீரர்களின் நடனம்' என்று அழைக்கப்படுகிறது. போர்க்களத்திற்குச் செல்லும் முன் போர்வீரர்கள் சிவபெருமானின் சிலைக்கு முன்பாக இந்த நடனத்தை ஆடுகிறார்கள்.[3] வாரங்கலில் தங்கள் வம்சத்தை நிறுவிக் கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் ஆட்சி செய்த காகத்தியர்களின் ஆட்சியின் போது பெரிணி தன் உச்சத்தை அடைந்தது. ஜயப சேனானியின் சமசுகிருத நூலான நர்த்திய ரத்னாவளியில் இந்நடன வடிவம் குறிப்பிடப்பட்டுள்ளது.[3] இதன் சிக்கலான அசைவுகள் மற்றும் தொன்மங்களின் அடிப்படையில், நடன வடிவம் நீண்ட காலத்திற்கு முன்பே வளர்ந்ததாக நம்பப்படுகிறது.[4] இந்த நடன வடிவம் 'ப்ரேரனா' (உத்வேகம்) மற்றும் உச்ச நடனக் கலைஞரான சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. வாரங்கலில் உள்ள ராமப்பா கோயிலின் கர்ப்பக் குடி (சன்னதி சன்னதி) அருகே உள்ள சிற்பங்களில் இந்த நடனத்திற்கான சான்றுகளைக் காணலாம்.[5][3] பெரிணி என்பது பறையினை ஒலிக்கும் துடிப்புடன் நடனமாடுவார்கள். நடனக் கலைஞர்கள் தங்கள் உடலில் சிவனின் சக்தியை உணரும் நிலைக்குத் தங்களைத் தாங்களே ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். நடனமாடும் போது சிவனை தனக்குள் வருமாறும், அழைத்து அவர் தங்களுக்குள் வந்ததாக உணர்ந்து சிவனைப் போன்றே நடனமாடுகிறார்கள். கோயில்களுக்கு முன்பாக உள்ள சிறப்பு மேடைகளில் நடனம் ஆடப்படுகிறது.[4] காகதீய வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு பெரிணி நடன வடிவம் கிட்டத்தட்ட மறைந்து போனது. ஆனால் முனைவர் நடராஜ ராமகிருஷ்ணா பெரிணி நடனத்தில் மறுமலர்ச்சியைக் கொண்டு வந்தார்.[1][6][2] மேலும் பார்க்கவும்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia