பெரிய மாரியம்மன் கோயில், ஈரோடு
பெரிய மாரியம்மன் கோயில் (Periya Mariamman Temple) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டின்ஈரோடு நகரில் ஈரோடு மாநகராட்சிக் கட்டிடத்திற்கு எதிரே பன்னீர்செல்வம் பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ளது. இது இந்துக் கடவுளான மாரியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கொங்கு சோழர்கள் 1200 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோவிலைக் கட்டினர்.[1] குழுக் கோயில்கள்இந்தக் கோயில் நிர்வாகத்துடன் நகரத்தில் உள்ள மற்ற இரண்டு கோயில்களும் அடங்கும்.[2]
மேலும், நகரத்திற்குள் கருங்கல்பாளையம் மாரியம்மன், நடு மரியம்மன், நாராயண வலசு மாரியம்மன், குமலன்குட்டை மாரியம்மன், எல்லை மாரியம்மன் உள்ளிட்ட பல மாரியம்மன் கோயில்களும் உள்ளன. ஆனால், நகரத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் கோயில்களுக்கும் தலைமைத் தெய்வமாக இந்தப் பெரிய மாரியம்மனே வணங்கப்படுகிறார்.[3] பண்டிகைகள்ஒவ்வோர் ஆண்டும், தமிழ் மாதமான பங்குனியில் (மார்ச்-ஏப்ரல்), நகரத்தில் ஒரு பெரிய திருவிழா கொண்டாடப்படுகிறது.[4] திருவிழா பக்ன்குனியின் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கும்.[5] இதே நேரத்தில் சின்ன மாரியம்மன் கோயிலிலும், வாய்க்கால் மாரியம்மன் கோயிலிலும் திருவிழா தொடங்கும். கொண்டாட்டத்தின் பிற நடவடிக்கைகள்:
கம்பம் நடுதலுக்கும் மஞ்சள் நீராட்டுக்கும் இடையில் 20 நாட்கள் கொண்டாட்டங்கள் நடக்கின்றன.[6] மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia