பெருநகரக் கலை அருங்காட்சியகம்
நியூயார்க் நகரத்தின் பெருநகரக் கலை அருங்காட்சியகம் (Metropolitan Museum of Art) ஐக்கிய அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய அருங்காட்சியகம் ஆகும். இதைச் சுருக்கமாக "த மெட்" (the Met) என்றும் அழைப்பதுண்டு. 2018 இல் மூன்று இடங்களில் உள்ள இந்த அருங்காட்சியகத்துக்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை 6,953,927. இதன் அடிப்படையில் உலகின் மூன்றாவது பெரிய அருங்காட்சியகமாக இது உள்ளது.[8] இந்த அருங்காட்சியகத்தின் நிரந்தர சேகரிப்பின் 17 பிரிவுகளில் இரண்டு மில்லியன் (20 இலட்சம்) ஆக்கங்கள் உள்ளன.[9] மான்கட்டனின் மேல் கிழக்குப் பக்கத்தில், "மியூசியம் மைல்" என அழைக்கப்படும் வீதியை அண்டி, மத்திய பூங்காவின் கிழக்கு விளிம்புப் பகுதியில் அமைந்த இதன் முதன்மைக் கட்டிடம் பரப்பளவின் அடிப்படையில் உலகின் மிகப் பெரிய காட்சியகங்களில் ஒன்றாக விளங்குகின்றது. மேல் மான்கட்டனில் அமைந்துள்ளதும், ஒப்பீட்டளவில் மிகவும் சிறியதுமான இன்னொரு பிரிவு ஓவியம், கட்டிடக்கலை, மத்தியகால ஐரோப்பாவைச் சேர்ந்த கலைப்பொருட்கள் போன்றவற்றை உள்ளடக்கிய விரிவான சேகரிப்புக்களைக் கொண்டுள்ளது. அருங்காட்சியகத்தின் நவீன, சமகாலக் கலைத் திட்டத்தை விரிவாக்கும் நோக்கத்துடன் 2016 மார்ச் 18 அன்று மடிசன் அவெனியூவில் "மெட் புரோயர்" (Met Breuer) அருங்காட்சியகம் திறந்துவைக்கப்பட்டது. கலை, கலைக் கல்வி ஆகியவற்றை அமெரிக்க மக்களிடம் கொண்டுவந்து சேர்ப்பதற்காகவே 1879 ஆம் ஆண்டில் இந்தப் பெருநகரக் கலை அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. 1872 பெப்ரவரி 20 ஆம் தேதி திறந்துவைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் தொடக்கத்தில் 681 ஐந்தாம் அவெனியூவில் இருந்து செயற்பட்டது. சேகரங்கள்![]() பெருநகரக் கலை அருங்காட்சியகத்தின் நிரந்தரச் சேகரங்கள் 17 தனித்தனிப் பிரிவுகளால் காப்பாட்சி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவும் சிறப்புக் காப்பாட்சிப் பணியாளர்களையும், அறிஞர்களையும் உள்ளடக்கியுள்ளது. அத்துடன், சேகரங்களைப் பாதுகாத்துப் பேணுவதற்காகத் தனியான ஆறு பிரிவுகளும், ஒரு அறிவியல் ஆய்வுப் பிரிவும் இந்கு உள்ளன.[10] செந்நெறிப் பழங்காலத்தையும், பண்டைய எகிப்தையும் சேர்ந்த கலை ஆக்கங்களும்; ஏறத்தாழ, புகழ்பெற்ற எல்லா ஐரோப்பியக் கலைஞர்களதும் ஓவியங்கள், சிற்பங்கள் என்பனவும்; நவீன மற்றும் அமெரிக்க ஓவியங்களின் விரிவான சேகரிப்புக்களும் நிரந்தர சேகரிப்புக்குள் அடங்குகின்றன. ஆப்பிரிக்க, ஆசிய, ஓசானிய, பைசண்டிய, இசுலாமியக் கலைகள் தொடர்பான ஏராளமான அரும்பொருட்களைப் பெருநகரக் கலை அருங்காட்சியகம் தனது சேகரிப்பில் வைத்துப் பேணிவருகின்றது.[11] இசைக் கருவிகள், உடைகள், துணைப் பொருட்கள், பழங்கால ஆயுதங்கள், உலகின் பல பாகங்களைச் சேர்ந்த போர்க் கவசங்கள் போன்ற பலவகையான பொருட்களுக்கு இந்த அருங்காட்சியகம் உறைவிடமாக உள்ளது.[12] முதலாம் நூற்றாண்டு ரோமர் காலத்திலிருந்து, நவீன அமெரிக்கா வரையிலான பல்வேறு காலப் பகுதிகளைச் சேர்ந்த உள்ளக அலங்கார வடிவமைப்புகள் இதன் காட்சிக் கூடங்களுக்குள் உருவாக்கப்பட்டுள்ளன. நிரந்தரக் காட்சிக்குப் புறம்பாகப் பல பெரிய நடமாடும் கண்காட்சிகளையும் ஆண்டு முழுவதும் இந்த அருங்காட்சியகம் ஒழுங்கு செய்கின்றது. புவியியல் அடிப்படையிலான சேகரங்கள்பழங்கால அண்மைக் கிழக்குக் கலை19 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த அருங்காட்சியகம் அண்மைக் கிழக்கில் இருந்து பழங்காலக் கலைப்பொருட்களைச் சேகரிக்கத் தொடங்கியது. சில ஆப்பெழுத்து வில்லைகளுடனும், முத்திரைகளுடனும் தொடங்கிய அண்மைக் கிழக்குக் கலைச் சேகரம் இப்போது 7,000 பொருட்களுக்கு மேல் கொண்டதாக வளர்ந்துள்ளது.[13] புதிய கற்காலம் தொடக்கம், சசானியப் பேரரசின் வீழ்ச்சியை உள்ளடக்கிப் பிந்திய பழங்காலத்தின் முடிவு வரையிலான வரலாற்றைக் காட்டும் வகையில்; சுமேரிய, இட்டைட்டு, சசானிய, அசிரிய, பபிலோனிய எலமைட்டுப் பண்பாடுகளின் கலைப்பொருட்களும், தனித்துவமான வெண்கலக்காலப் பொருட்களும் அருங்காட்சியகத்தின் சேகரங்களில் அடங்கியுள்ளன. அசிரிய மன்னன் அசுர்னாசிர்ப்பால் என்பவரின் வடமேற்கு மாளிகையில் இருந்து எடுக்கப்பட்ட, லமாசு எனப்படும் காவல் உருவங்களைக் கொண்ட ஒரு தொகுதி பெரிய கற்கள் அண்மைக் கிழக்குச் சேகரத்தின் சிறப்புக் கூறு ஆகும்.[14] குறிப்பிடத்தக்கவைஇந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சேகரங்களில் சில: மேற்கோள்கள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia