இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.
மே/ஜூன் 1944 இல் ஆஸ்ச்விட்ஸ் வதைமுகாமில் "தேர்வு" நடைபெறுகிறது. வலப்பக்கம் உள்ளவர்கள் அடிமை வேலைக்கும், இடப்பக்கத்தில் உள்ளவர்கள் வாயு அறைக்கும் அனுப்பப்படவுள்ளனர். இப்படம் ஹங்கேரியிலிருந்து யூதர்கள் கொண்டுவரப்படுவதைக் காட்டுகிறது. ஏர்ன்ஸ்ட் ஹாப்மன் அல்லது பேர்னாட் வால்ட்டர் பிடித்த படம்.[1]
பெரும் இன அழிப்பு (The Holocaust) என்பது இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் ஜெர்மனியில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கப் பயன்படும் ஆங்கிலச் சொல்லான ஹாலோகோஸ்ட் (Holocaust) என்பதற்கு இணையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது, இதனை சோகா என்றும் குறிப்பர். இது அக்காலத்தில் ஜேர்மனியில் ஆட்சியில் இருந்த, அடொல்ஃப் ஹிட்லரின் தலைமையிலான தேசிய சோசலிச ஜேர்மன் தொழிலாளர் கட்சியின் (நாஸி) இன அழிப்புக் கொள்கையின் ஒரு பகுதியாக கீழ் இடம்பெற்றது. யூதர்கள் தவிர வேறும் பிற இனத்தவர்களும், பிரிவினரும் கூடப் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களுள், ஜிப்சிகள், சோவியத் ஒன்றியத்தவர் மற்றும் சோவியத் போர் கைதிகள், பொதுவுடமைவாதிகள், போல் இனத்தவர், பிற சிலாவிய மக்கள், ஊனமுற்றோர், தன்னினச் சேர்க்கையாளர், அரசியல் எதிரிகள், மாறுபட்ட சமயக்கருத்துக் கொண்டவர்கள், யூஹோவா சாட்சியாளர் என்போரும் அடங்குவர். பல அறிஞர்கள் பெரும் இன அழிப்பு என்னும் போது மேற்படி எல்லாப் பிரிவினரையும் சேர்த்துக் கொள்ளாமல் யூதர்களின் படுகொலையை மட்டுமே குறிப்பர். ஜேர்மன் அரசு இதனை "யூதர் பிரச்சினைக்கான இறுதித் தீர்வு" என வர்ணித்தது. நாஸி ஜேர்மனியில் இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட எல்லாப் பிரிவினரதும் மொத்தத் தொகை 9 தொடக்கம் 11 மில்லியன் வரை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இத் தொல்லைகளும் படுகொலைகளும் ஜேர்மனியின் அரசினால் பல படிகளில் நிறைவேற்றப்பட்டன. யூதர்களைக் குடிமக்கள் சமூகத்திலிருந்து விலக்கும் சட்டம் இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு நீண்ட காலத்துக்கு முன்னரே இயற்றப்பட்டது. வதைமுகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கே கொண்டு வரப்படுபவர்கள் களைப்பாலும், நோயாலும் இறக்கும்வரை அடிமைகளாக வேலை வாங்கப்பட்டனர். கிழக்கு ஐரோப்பாவில் புதிய பகுதிகளைக் கைப்பற்றிய ஜெர்மனி, சிறப்புப் படையணிகள் மூலம், யூதர்களையும், அரசியல் எதிரிகளையும் கொன்று குவித்தது. யூதர்களும், ரோமாக்களும் நெருக்கடியான பகுதிகளில் அடைத்து வைக்கப்பட்டுப் பின்னர் அங்கிருந்து சரக்குத் தொடர்வண்டிகள் மூலம் நூற்றுக் கணக்கான மைல்கள் தொலைவில் இருந்த கொலை முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பலர் வழியிலேயே இறந்து போயினர். எஞ்சியோர் நச்சுவாயு அறைகளுள் அடைத்துக் கொல்லப்பட்டனர். அக்கால ஜேர்மனியின் அதிகார அமைப்பின் ஒவ்வொரு பிரிவும் இக் கொலை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. ஜெர்மனி ஒரு இனப்படுகொலை அரசாக விளங்கியது என ஓர் அறிஞர் குறிப்பிட்டார்.
1941 இலிருந்து 1945 வரை, யூதர்கள் ஒரு இனப்படுகொலை மூலம் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டனர்; இது ஐரோப்பாவின் பிற மக்களிடையே நடைபெற்ற அடக்குமுறை மற்றும் படுகொலை நிகழ்வுகளின் ஒரு பகுதியாக நிகழ்ந்தது. சுத்ஸ்டாப்பெல் ஒருங்கிணைப்பின் கீழ், நாட்சி கட்சியின் உயர் தலைமையின் வழிகாட்டல்கள் உடன், செருமனி அரசின் அதிகார மையத்தின் ஒவ்வொரு பகுதியும் செருமனி ஆக்கிரமிப்பு ஐரோப்பா முழுவதும் நடைபெற்ற பெரும் படுகொலைகளை நடத்துவதில் மற்றும் ஏற்பாடுகள் செய்வதில் ஈடுபட்டு வந்தது. இந்த நிகழ்வுகள் நாட்சி செருமனிக்குள், அதன் நேச நாடுகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகளிலும் நிகழ்ந்தது. பெரும் மனித உரிமை மீறல்களை நிகழ்த்தும் நோக்குடன் 42,500க்கும் மேற்பட்ட தடுப்பு முகாம் வசதிகள் பயன்படுத்தப்பட்டன. பெரும் இன அழிப்பு செயலில் ஈடுபட்டவர்களாக 200,000க்கும் அதிகமான நபர்கள் கணக்கிடப்பட்டுள்ளனர்.
இந்த இன அழிப்பை நடைமுறைப்படுத்துவது ஒவ்வொரு படியாக, "யூதர்களின் கேள்விக்கு இறுதியான தீர்வு" என்று கூறப்பட்ட அழிப்புக் கொள்கையையின் படி நிகழ்ந்தது. இட்லர் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, செருமானிய அரசு யூதர்கள் குடிமைச் சமூகத்திலிருந்து வெளியேற்றுவதற்கான சட்டங்களை நிறைவேற்றியது, அதில் குறிப்பிடத்தக்கது நியூரம்பெர்க் சட்டம் 1935. 1933 இல் தொடங்கி நாட்சிகள் வதை முகாம் வலைப்பின்னல்களை அமைக்கத் தொடங்கினர். 1939 இல் போர் தொடங்கிய பிறகு செருமானிய மற்றும் வெளிநாட்டு யூதர்கள் போர்கால முகாம்களில் கூட்டம் கூட்டமாக அடைக்கப்பட்டனர். 1941 இல் செருமானி கிழக்கில் புதிய பகுதிகளைக் கைப்பற்றிய பிறகு எல்லா யூத எதிர்ப்பு செயல்களும் அதிகமாகியது. சிறப்பு துணை இராணுவப் படையினரான ஈன்சாட்சுகுரூப்பன் ஓராண்டிற்குள் 2 மில்லியன் யூதர்கள் வரை பெரும் துப்பாக்கிச் சூடுகள் மூலம் படுகொலை செய்தனர். 1942 இன் நடுப்பகுதியில், பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சரக்கு தொடருந்துகள் மூலம் வதை முகாம்களுக்கு கடத்தப்பட்டனர். பயணத்தின் கொடுமையைத் தாங்கி உயிர் பிழைத்தவர்கள் புகை அரங்குகளில் திட்டமிட்டு கொல்லப்பட்டனர். இது ஐரோப்பால் 1945 ஏப்ரல் - மேயில் இரண்டாம் உலகப்போர் முடிவு வரை தொடர்ந்தது.
யூத ஆயுதப் படைக் குழுக்கள் வரம்புடைய அளவில் இருந்தன. மிகக் குறிப்பிடத்தக்க விதிவிலக்கு 1943 இன் வார்சா முகாம் கிளர்ச்சி நிகழ்வாகும், அதில் ஆயிரக்கணக்கான குறைந்த ஆயுதங்களை கொண்ட யூத வீரர்கள் வாபன் சுத்ஸ்டாபலை கரையில் நான்கு வாரங்களுக்கு தடுத்து வைத்தனர். தோராயமாக 20,000 - 30,000 யூத பிரிவினைவாதிகள், கிழக்கு ஐரோப்பாவில் நாட்சி படைகளையும் அவர்களது கூட்டாளிகளையும் எதிர்த்து போரிட்டனர். பிரஞ்சு யூதர்கள், பிரஞ்சு எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்கெடுத்து நாட்சி படைகள் மற்றும் விட்சி பிரஞ்சு அதிகாரத்திற்கெதிராக கொரில்லா போர் முறையில் போரிட்டனர். ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆயுதம் தாங்கிய யூத கிளர்ச்சி நடந்தன.
சொற்பிறப்பியல் மற்றும் வரையறை
சொற்பிறப்பியல் மற்றும் வேறு பெயர்கள்
ஹோலகோஸ்ட்டு (பெரும் இன அழிப்பு) என்ற சொல் கிரேக்க சொல்லான ஓலக்கோசுட்டசு என்ற சொல்லிலிருந்து வருகிறது, இது கடவுள்களுக்கு அழிக்கப்படும் விலங்கு படையலைக் குறிக்கிறது, அந்த நிகழ்வில் முழு விலங்கும் எரிக்கப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படுகிறது.[2] பின்னர் இது பெரும் அளவில் மக்களை படுகொலை செய்யும் நிகழ்வுகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.[3] சோகா என்று சொல்லிற்கு, "பேரழிவு" என்பது பொருளாகும் இது 1940களில் ஆரம்பத்தில் பெரும் இன அழிப்பைக் குறிக்கும் எபிரேய மொழிச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.[4]
ஹோலகோஸ்ட்டு (பெரும் இன அழிப்பு) என்பது 1950களில் வரலாற்று ஆய்வாளர்களால் எபிரேய மொழி சொல்லான சோகோ என்பதன் மொழிபெயர்ப்பாக யூத இனப்படுகொலையைக் குறிப்பாக சுட்டிக் காட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டது. ஹோலகோஸ்ட்டு என்ற பெயரிலான தொலைக்காட்சி தொடர் இச்சொல்லை யூத படுகொலையைக் குறிக்கும் பொதுவான சொல்லாக அமெரிக்க ஐக்கிய நாடுகள் முழுவதும் மாற்றியது என்று கூறப்படுகிறது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் நோக்குடன் பெரும் இன அழிப்பு என்பது யூதர்களைத் தவிர பல இன அழிவுகளையும் குறிக்கும் அதே வேளையில், சோகோ என்னும் சொல்லானது யூத இன அழிப்பைக் குறிப்பாக சுட்டிக் காட்டுகிறது.
நாட்சி இனப்படுகொலையைக் குறிக்க "யூதர்களின் கேள்விக்கு இறுதித் தீர்வு" அல்லது "இறுதித் தீர்வு" என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினர்.[5]
இன அழிப்பு முகாம்கள்
அண்ணளவாக. ஒவ்வொரு இன அழிப்பு முகாமிலும் இறந்தவர்களின் எண்ணிக்கை[6]
↑1.8–1.9 மில்லியன் non-Jewish Polish citizens are estimated to have died as a result of the Nazi occupation and the war. Estimates are from Polish scholar, Franciszek Piper, the chief historian at Auschwitz. Poles: Victims of the Nazi Eraபரணிடப்பட்டது 2012-12-12 at the வந்தவழி இயந்திரம் at the United States Holocaust Memorial Museum.
↑Freemasons for Dummies, by Christopher Hodapp, Wiley Publishing Inc., Indianapolis, 2005, page 85, sec. Hitler and the Nazis
↑The number of Slovenes estimated to have died as a result of the Nazi occupation (not including those killed by Slovene collaboration forces and other Nazi allies) is estimated between 20,000 and 25,000 people. This number only includes civilians: Slovene partisan POWs who died and resistance fighters killed in action are not included (their number is estimated at 27,000). These numbers however include only Slovenes from present-day Slovenia: it does not include Carinthian Slovene victims, nor Slovene victims from areas in present-day Italy and Croatia. These numbers are result of a 10-year long research by the Institute for Contemporary History (Inštitut za novejšo zgodovino) from Ljubljana, Slovenia. The partial results of the research have been released in 2008 in the volume Žrtve vojne in revolucije v Sloveniji (Ljubljana: Institute for Conetmporary History, 2008), and officially presented at the Slovenian National Council ([https://web.archive.org/web/20110719102638/http://www.ds-rs.si/?q=publikacije%2Fzborniki%2FZrtve_vojne பரணிடப்பட்டது 2011-07-19 at the வந்தவழி இயந்திரம்]). The volume is also available online: [File:http://www.ds-rs.si/dokumenti/publikacije/Zbornik_05-1.pdfபரணிடப்பட்டது 2011-07-19 at the வந்தவழி இயந்திரம்]
↑The Holocaust Chronicle, Publications International Ltd., p. 108.
↑Shulman, William L. A State of Terror: Germany 1933–1939. Bayside, New York: Holocaust Resource Center and Archives.
↑Pike, David Wingeate. Spaniards in the Holocaust: Mauthausen, the horror on the Danube; Editorial: Routledge Chapman & Hall பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-415-22780-3. London, 2000.