பெல்லரைவ் ஓவல் அரங்கம்
பெல்லரைவ் ஓவல் (Bellerive Oval), பரவலாக புரவலர் பெயரால் பிளென்டுஇசுடோன் எரீனா (Blundstone Arena), என அறியப்படும் இந்த விளையாட்டரங்கம் ஆஸ்திரேலியாவின் தாசுமேனியாவின் ஹோபார்ட்டின் கிழக்குக் கடலோரத்தில் கிளாரன்சு நகரின் பெல்லரைவ் புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ளது; இங்கு முதன்மையாக துடுப்பாட்டம் மற்றும் ஆத்திரேலியக் காற்பந்தாட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. தாசுமேனியாவில் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளை நடத்தும் ஒரே இடமாக இந்த அரங்கம் விளங்குகின்றது. 16,000 பேர் அமரக்கூடிய இந்த அரங்கத்தில் சாதனை வருகைப்பதிவாக 2003ஆம் ஆண்டில் ஆத்திரேலியா, இங்கிலாந்து ஆட்டத்தின்போது 16,719 பேர் கண்டு களித்தனர்.[1][2][3] இது மாநில துடுப்பாட்ட அணிகளின் விளையாட்டரங்கமாக உள்ளது; தாசுமேனியப் புலிகள், ஓபர்ட்டு அரிக்கேன்சு அணிகளின் தாயக அரங்கமாக உள்ளது. இங்கு 1988 முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட ஆட்டங்களும் 1989 முதல் பன்னாட்டுத் தேர்வு ஆட்டங்களும் நடைபெறுகின்றன. $16 மில்லியன் செலவில் மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு 2002 இறுதியில் முடிவுற்றது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia