பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார்
பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார் (21 செப்டம்பர் 1901 – 23 சனவரி 1975) ஒரு இந்தியப் பத்திரிகையாளரும், தொழில்முனைவோரும், புரவலரும் ஆவார். இலங்கையில் புகழ்பெற்ற வீரகேசரி நாளிதழை நிறுவியவர்.[1] இளமைப் பருவம்பெ.பெரி.சுப்பிரமணியம் செட்டியார் 1901 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆவணிப்பட்டியில் பெரி.பெரியண்ணச் செட்டியார் (இ. 1927)[2] - விசாலாட்சி ஆச்சியின் ஐந்து குழந்தைகளில் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். பத்திரிகைத் துறையில் இவர் அதிக ஆர்வம் கொண்டதால் இந்தியாவில் பல பத்திரிகைகளுக்கு எழுத்தாளராக இருந்தார். 1920களின் துவக்கத்தில், இந்தியாவை விட்டு புதிய இடங்களை ஆராய வேண்டும் என்று முடிவு செய்தார், அதற்காக இவர் இலங்கை சென்றார், அங்கு இந்தியத் தொழிலாளர்களின் நிலைமைகளைப் பார்த்து, நியாயத்தையும் சமத்துவத்தையும் வலியுறுத்தும் நோக்கில் ஒரு பத்திரிகையை நிறுவ முடிவு செய்தார். வீரகேசரிசுப்பிரமணியம் செட்டியார் 1930 ஆம் ஆண்டில் இலங்கையில் ஒரு பத்திரிகையை நிறுவினார், அதற்கு "வீரகேசரி" என பெயரிட்டார், அதன் பொருள் "வெற்றி பெற்ற சிங்கம்" என்பதாகும். இதுவே இலங்கையின் முதல் தமிழ் நாளிதழ். இதன் முதல் பதிப்பு 1930 ஆகத்து 6 அன்று கொழும்பு மருதானையில் நிறுவப்பட்ட வீரகேசரி அச்சகத்திலிருந்து முதலில் வெளியிடப்பட்டது.[1] செட்டியார் இந்த பத்திரிகையின் முதன்மை ஆசிரியராக செயல்பட்டு, 20 ஆண்டுகளுக்கும் மேல் இதை வழிநடத்தினார். சுப்பிரமணியம் செட்டியாரின் தனிச் சொத்தாக இருந்த இந்நிறுவனம், 1950களின் தொடக்கத்தில் பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுவனமாகியது.[1] 1948-இல் பிரித்தானிய ஆதிக்கத்திலிருந்து இலங்கை விடுதலை பெற்ற பிறகு, இலங்கை நாடாளுமன்றம் இலங்கை குடியுரிமைச் சட்டத்தை இயற்றியது. வியாபாரத்தை தொடர இலங்கை குடியுரிமையை ஏற்பதற்கு பதிலாக, இந்தியா திரும்ப முடிவு செய்து, 1965 ஆம் ஆண்டில் வீரகேசரியை விற்றுவிட்டார். இன்று, இந்த பத்திரிகை இலங்கையின் அனைத்து தமிழ் பேசும் மக்களாலும் மிக அதிகமாகப் படிக்கப்பட்டு பரவலாக வாசிக்கப்படும் பத்திரிகையாக உள்ளது. வணிக விரிவாக்கம்செட்டியார் 1950களில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் சொத்துக்களை வாங்கி வணிகங்களை நிறுவினார். சிங்கப்பூரில், நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் வணிக நிறுவனங்களின் ஒரு பகுதியாக இருந்த "SVSP Money Lending" என்ற பெயரில் பணக்கடன் வழங்கும் தொழிலை நிறுவினார்.[3] செட்டியார் சிங்கப்பூரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அசையாச் சொத்துகளிலும் முதலீடு செய்தார். மலேசியாவில் தோட்டங்களை வாங்கினார், மலாக்காவிலுள்ள கெலாங் பாத்தாவில் வீரகேசரி இரப்பர் தோட்டங்களை நிறுவினார், இது மலாக்காவின் முதல் ஆசியத் தோட்டமாகும்.[3] மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகth தனது வெளிநாட்டுத் தொழில்களை நடத்தி வந்த செட்டியார், இறுதியில் இந்தியாவில் உள்ள தனது சொந்தக் கிராமத்தில் அவற்றை ஒருங்கிணைக்க முடிவு செய்தார். அங்கு அவர் தனது வாழ்க்கையின் பிற்பகுதியைக் கழித்தார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியை மையமாகக் கொண்டு இந்தியப் பதிப்பகத்தை நிறுவி வீரகேசரி நாளிதழ்களை இந்தியாவிற்கு கொண்டு வர திட்டமிட்டார். இருப்பினும், இந்த திட்டத்தை அவரால் செயல்படுத்தப்படுத்த முடியவில்லை. இறுதியில், சிவகங்கை மாவட்டம் அழகாபுரியில் கேசரி பிரதர்ஸ் & கோ என்ற வரையறுக்கப்பட்ட நிறுவனத்தை நிறுவினார். குடும்பம்![]() சுப்பிரமணியம் செட்டியார் முதல் மனைவி பெயர் குப்பாள் ஆச்சி, அவர்களுக்கு மூன்று குழந்தைகள். குப்பாள் ஆச்சி இளவயதிலேயே இறக்க, செட்டியார் பொன்னம்மாள் ஆச்சியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார், அவர்களுக்கு எட்டு குழந்தைகள் பிறந்தனர். இவர்களின் மகன் சுப. சுந்தரகேசரி, பேரன் சு. சுப்ரமணியம், கொள்ளுப்பேரன் சுந்தர் சுப்ரமணியம் என வாரிசுகள் அனைவரும் காப்பி உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.[4] சுப்பிரமணியம் செட்டியார் 1975 சனவரி 23 ஆம் தேதி, 73-ஆவது அகவையில் இறந்தார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia