|
அனைத்துலக விண்வெளி நிலையம் என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
|
இது தமிழக ஊடங்களின் சர்வதேச விண்வெளி நிலையம் என வழக்கில் உள்ளது. வினோத் 07:29, 30 நவம்பர் 2007 (UTC)Reply
- வழிமாற்று கொடுத்திருக்கிறேன் வினோத்.--Sivakumar \பேச்சு 07:42, 30 நவம்பர் 2007 (UTC)Reply
வினோத், தமிழக ஊடகங்களில் உள்ளதை அச்சு பிசகாமல் அப்படியே பின்பற்றத் தேவை இல்லை. சர்வதேச போன்ற பிற மொழிச் சொற்களைத் தவிர்த்து பன்னாட்டு, அனைத்துலக போன்ற வழக்கில் இருக்கும் இணையான நல்ல தமிழ்ச் சொற்களை முதன்மையாக ஆளலாம். அதே வேளை, தேடுபவர்களுக்கு வசதியாக வழிமாற்றுப் பக்கங்களையும் உருவாக்கலாம்.--ரவி 11:42, 30 நவம்பர் 2007 (UTC)Reply
அனைத்துலக என்பதை விட பன்னாட்டு என்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன்.Global என்பதற்கு இணையாக அனைத்துலக என்ற சொல்லை பயன்படுத்தலாம். International என்பதற்கு பன்னாட்டு என்பது சரியான சொல்லாக இருக்கும். வினோத் 15:47, 30 நவம்பர் 2007 (UTC)Reply
world=உலக; international = பன்னாட்டு; global = அனைத்துலக என்று ஆளலாம்--ரவி 18:28, 30 நவம்பர் 2007 (UTC)Reply
- பன்னாட்டு என்பது multi-national என்பதற்கு இணையாகவே பயன்படுத்தப்படுவது வழக்கம்.Mayooranathan 18:40, 30 நவம்பர் 2007 (UTC)Reply
அனைத்துலக என்பது Global என்ற சொல்லிற்கே சரியாக பொருந்தும். அப்போது International என்பதற்கு என்ன சொல் பயன்படுத்துவது ? வினோத் 07:10, 1 டிசம்பர் 2007 (UTC)
- global, world, universal அனைத்துக்கும் "உலக" என்பது பொருந்தும். international என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுடன் சம்பந்தப்பட்டது. அனைத்துலக என்பதைவிட பன்னாட்டு என்பது கூடுதலாகப் பொருந்துகிறது.(எனது கருத்து).--Kanags 07:22, 1 டிசம்பர் 2007 (UTC)
International-பன்னாட்டு என்றால் மயூரநாதன் கூறுவது போல் Multinational என்ற சொல்லுக்கு இணையாக எந்த தமிழ் பதத்தை ஆள்வது ? வினோத் 07:28, 1 டிசம்பர் 2007 (UTC)
- இரண்டும் ஏறத்தாழ ஒரே பொருள் தரும் சொற்கள்தாம்.[1][2] பின்னது பொதுவாக நிறுவனங்களைக் குறிக்கிறது அவ்வளவே. International என்பதை உள்ளபடியே மொழிபெயர்த்தால் நாட்டிடை, நாடுசாரா என்பனப்போல வரும். இடத்திற்கேற்ப கொள்ளலாம். மற்றபடி ஒருமொழியில் ஒரு சொல் பல பொருள் தருமிடத்தில் மற்றொரு மொழியில் அதே தொடர்வைக் கொண்ட மொழிபெயர்ப்பு அமையுமென்பதில்லை. -- Sundar \பேச்சு 08:41, 1 டிசம்பர் 2007 (UTC)