பேச்சு:இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்இக்கட்டுரைத் தலைப்பு தவறென நினைக்கிறேன். ஏனெனில், தமிழகம் என்பது தனி நாடல்ல. தமிழகத்துக்கென்று தனியான விடுதலைப் போராட்டம் இருந்ததா?--பாஹிம் (பேச்சு) 12:05, 7 மே 2012 (UTC)
தமிழர்கள் என்று குறிப்பிடப்பட்டால் ஜான்சி ராணி படை இக்கட்டுரையையும் கவனிக்கவும். மேலும் பாளையக்காரர்கள் பற்றி இக்கட்டுரையில் காணோமே.?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:44, 8 மே 2012 (UTC) தகவல் தேவை//ஆனால் 1749 முதல் 1753 வரை திருச்சியில் நடைபெற்ற பெரும் போரில் கர்நாடகம், தஞ்சாவூர், மைசூர் ஆகிய நாடுகளின் படைகள் ஒன்று சேர்ந்து எதிர்த்த போதும் ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டது. // கட்டுரையில் மேலுள்ள வாக்கியத்திற்கான போர் எங்கே எப்போது எவரெபரால் நடத்தப்பட்டது எனக் கூற இயலுமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:35, 18 மே 2012 (UTC)
வீரன் மாவீரன் என்ற அடைமொழிகள் அவசியம்தானா?விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விடுதலை வீரர்கள் என்ற பகுதியின் கீழிருக்கும் பட்டியலில் சிலருக்கு வீரன் மாவீரன் என்றெல்லாம் அடைமொழிகள் கொடுக்கப்பட்டிருகின்றவே. இவை அவசியம் தானா என்று அலோசிக்கவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:29, 13 செப்டம்பர் 2013 (UTC) கு. காமராசர்வரிசை எண்(147 ) இறுதியில் குறிப்பிடப் பட்டுள்ள 'காமராசர் ' ஏற்கனவே, வரிசை எண் 72ல் குறிப்பிடப்பட்டுள்ளார் . எனவே , நீக்கம் செய்துள்ளேன். Helppublic (பேச்சு) 09:14, 29 சூன் 2020 (UTC) |
Portal di Ensiklopedia Dunia