பேச்சு:இரசினிகாந்து
Untitledஇவ்வுரையாடலின் முடிவுகள் விக்கிபீடியா:நடுநிலை நோக்கு அல்லது அதன் பேச்சுப் பக்கத்தில் சேர்க்கப்படவேண்டும் 1996 தேர்தலில் ரஜினிகாந்தின் பங்கு பற்றி தற்பொழுது கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகளில் எனக்கு உடன்பாடில்லை. இது போன்ற Subjective கருத்துகளை விக்கிபீடியாவில் தவிர்க்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து. 1996க்குப்பிறகு அவர் வேறு எந்தக்கட்சிக்கும் ஆதரவோ எதிர்ப்போ தெரிவிக்கவில்லை என்பது முற்றிலும் உண்மை அல்ல. நேரடியாகவோ மறைமுகமாகவோ அவர் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாகவும் 1999லும் பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவாகவும் பா.ம.க வுக்கு எதிராகவும் 2004 நாடாளுமன்றத்தேர்தல்களில் செயல்பட்டது நாடறிந்தது. 1996ல் மக்களின் மனநிலையே அரசுக்கு எதிராகத்தான் இருந்தது. அப்பொழுது ரஜினி சொன்ன கருத்துகள் மக்களின் மன நிலையை பிரதிபலிப்பதாக இருந்தது. அதை கருத்தை ஒவ்வொரு டீக்கடையிலும் திருவாளர் பொது ஜனம் சொல்லிக்கொண்டு தான் இருந்தார். பிரபலமான ரஜினியும் அக்கருத்தை சொன்னதால் கொஞ்சம் பரபரப்பாயிற்று. குருவி உட்கார பனம் பழம் விழுந்தது. அவ்வளவு தான். ஆளும் கட்சியாக இருந்த அ.இ.அ.தி.மு.க கட்சிக்கு எதிராக இவர் தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் பிரச்சாரம் செய்தது அக்கட்சி தோற்றதன் காரணங்களுள் ஒன்றாக கூறப்படுகிறது.அடுத்தடுத்த தேர்தல்களில் ரஜினிகாந்த் எக்கட்சியையும் ஆதரிக்கவோ எதிர்க்கவோ செய்யாமல் நடுநிலையுடன் இருந்து வருகிறார். என்ற கட்டுரை வாசகங்களை நீக்கக் கோருகிறேன். இது குறித்து எவ்வளவு விவாதித்தாலும் இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை ஆதாரபூர்வமாக நிரூபிக்க இயலாது. ஆதலால் இக்கருத்துகளை நீக்கி விடுதல் நலம்--ரவி (பேச்சு) 09:58, 17 ஆகஸ்ட் 2005 (UTC)
ஒரு கட்டுரைக்கு பங்களிக்கும் போது சர்ச்சைக்குரிய விஷயங்களை தவிர்ப்பதோ, சேர்ப்பதோ அவரவர் தனிப்பட்ட விருப்பம். எனினும் சர்ச்சைக்குரிய ஒன்றை சேர்க்கும் பொழுது அது உண்மை என்பதை உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு விஷயம் சர்ச்சைக்குரியது என்றாலே அதற்கு கண்டிப்பாக வரலாற்று முக்கியத்துவம் இருக்கும். ஆகவே அதைப் பற்றி தெரிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு, தெரியப்படுத்தும் கடமையும் விக்கிபீடியாவுக்கு உண்டு. இந்த கட்டுரையில் சர்ச்சைக்குரியதாக ரவி குறிப்பிடும் விஷயம் தமிழ்நாட்டு வரலாற்றில் முக்கியமில்லாததாக ரவி கருதலாம், எனினும் கட்டுரையில் உள்ள மனிதரின் வாழ்க்கையில் முக்கியமான ஒன்று என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. ஆக இதை நீக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. 1996இல் ரஜினியின் பேட்டி தான் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியதா என்பது பற்றி இப்போது பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம். எனினும் 1996 தேர்தல் முன் ரஜினி அஇஅதிமுகவுக்கு எதிராக பேட்டியளித்தார் என்பதும் அந்த காலகட்டத்தில் அதைப்பற்றி புகழ் பெற்ற அரசியல்வாதிகள், அரசியல் விமர்சகர்கள் உட்பட பலர் பரபரப்பாக பேசியதும் வரலாற்று உண்மை. ஆகவே ரஜினியின் அரசியல் பற்றிய அந்த பகுதி இக்கட்டுரையில் இடம்பெறுவது முக்கியம். "நேரடியாகவோ மறைமுகமாகவோ அவர் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாகவும் 1999லும் பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவாகவும் பா.ம.க வுக்கு எதிராகவும் 2004 நாடாளுமன்றத்தேர்தல்களில் செயல்பட்டது நாடறிந்தது.-ரவி" உண்மை. வேண்டுமானால் இதையும் கட்டுரையில் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு கட்டுரயில் சார்பு நிலை இருப்பதாக எவரேனும் கருதினால் அதை தொகுத்து சரிப்படுத்தலாம், அல்லது பேச்சுப் பக்கத்தில் விவாதிக்கலாம். அதற்கு பதில் எடுத்த எடுப்பிலேயே கட்டுரையில் உள்ள அந்த பகுதியை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. - ஸ்ரீநிவாசன் 06:54, 18 ஆகஸ்ட் 2005 (UTC)
ஆநங்கில விக்கிபிடியாவில் இருப்பதை போன்று ஒவ்வொரு காலகட்ட படங்களை இணைத்தால் நன்றாக இருக்கும்uthayai தலைப்பு தமிழ்மரபுக்கு மாறாக உள்ளதுதிருத்த வேண்டும். இரசினிகாந்து (இரஜினிகாந்து) என்றிருக்க வேண்டும் தமிழில் -ந்த். என்று முடியலாகாது.--செல்வா (பேச்சு) 01:52, 26 பெப்ரவரி 2020 (UTC) @செல்வா: அப்படியென்றால் விஜயகாந்த் பெயரையும் மாற்ற வேண்டியதாக இருக்குமே??-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 18:44, 9 ஏப்ரல் 2020 (UTC)
"மொழிக்கு மொழி இலக்கணம் மாறுபடும். ஆங்கிலத்திலே மாதத்தின் பெயர்களை எழுதும்பொழுது முதலெழுத்து தலைப்பெழுத்தாக (பெரிய எழுத்தாக) இருக்கவேண்டும். January, February December என்பதுபோல. இவற்றை january, december என்றெல்லாம் சிறிய எழுத்துடன் தொடங்கி எழுதினால் பிழை. அவற்றைத் திருத்துவார்கள். ஆனால் பிரான்சிய மொழியில் இப்படி யன்று. janvier, février, mars, avril, mai, juin, juillet, août, septembre, octobre, novembre, décembre என்றுதான் எழுதுவார்கள். முதல் எழுத்தைப் பெரிய எழுத்தாக எழுதினால் பிழை. பொருள் வேறுபடும். இதே போலத்தான், கிழமையின் பெயர்களையும் ஆங்கிலத்திலே Friday, Sunday என்றெல்லாம் முதல் எழுத்தைப் பெரிய எழுத்தாகஎழுதவேண்டும். பிரான்சியத்தில் அப்படி இல்லை. lundi, mardi, mercredi, jeudi, vendredi, samedi, dimanche. என்றெழுதுவார்கள். இடாய்ச்சில் (செருமன்) மேசை நாற்காலி போன்ற எல்லாப் பெயர்ச்சொற்களிலும் முதலெழுத்தைப் பெரிய எழுத்தாக எழுதவேண்டும். Tisch, Stuhl, Baum (table, chair, tree). எசுப்பானிய மொழியிலும் மாதங்களின் பெயர்களும் கிழமைகளின் பெயர்களும் சிறிய எழுத்தில்தான் தொடங்குகின்றன" எனவே மொழியின் இலக்கணத்தையும் மரபையும் போற்றுதல் தேவை. --செல்வா (பேச்சு) 00:11, 10 ஏப்ரல் 2020 (UTC)
|
Portal di Ensiklopedia Dunia