அமைச்சகம் என்றால் அமைச்சு இருக்கும் கட்டிடம் என்றே பொருள். கட்டிடம் தான் எல்லாவற்றையும் செய்கிறதா? பாஹிம் (பேச்சு) 03:03, 9 சூலை 2025 (UTC)Reply
- @Fahimrazick: கட்டிடம் என்பதும் தவறு. கட்டடம் என்பதுதான் சரி.-- சா. அருணாசலம் (உரையாடல்) 03:08, 9 சூலை 2025 (UTC)Reply
- கட்டிடம், கட்டடம் என்பது தேவையற்ற உரையாடல். அதில் இரண்டும் சரி. சிலர் வேண்டுமென்று தம் கருத்ததைத் திணிக்க முயல்வதே தவிர அதற்கு எந்த இலக்கண, இலக்கிய அடிப்படையுமில்லை. பாஹிம் (பேச்சு) 03:10, 9 சூலை 2025 (UTC)Reply
- @Fahimrazick: கட்டு+அடம் =கட்டடம், கட்டு+இடம் =கட்டிடம்.
கட்டிடம், கட்டடம் இதில் சொற்பொருள் வேறுபடுகிறது. அடமும் இடமும் ஒன்றா? நீங்கள் சொல்வதுதான் நன்றா? -- சா. அருணாசலம் (உரையாடல்) 17:06, 12 சூலை 2025 (UTC)Reply
- அமைச்சகம் என்று எழுதுவது சரியான பொருளைத் தராது. அமைச்சு என இருக்க வேண்டும். அமைச்சகம் என்பது அமைச்சு அமைந்திருக்கும் கட்டடம் எனவோ அல்லது அமைச்சு அமைந்திருக்கும் கட்டிடம் எனவோ பொருள் கொள்ளலாம்.--Kanags \உரையாடுக 22:44, 12 சூலை 2025 (UTC)Reply
- @சா அருணாசலம் கட்டு + அடம் என்றால் என்ன? அடம் என்றால் என்ன? இரண்டுக்கும் தெளிவாக விளக்கம் தாருங்கள். பாஹிம் (பேச்சு) 07:01, 13 சூலை 2025 (UTC)Reply
- கட்டடம் என்ற சொல்லைப் பிரித்தால் இவ்வாறு கட்டு+அடம் என்று தான் எழுத வேண்டும். அடம் என்றால் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்குதல், அடம் பிடித்தல், பிடிவாதம் பிடித்தல், (எட்டடுக்கு மாளிகை, அடுக்குமாடிக் கட்டடம்). -- சா. அருணாசலம் (உரையாடல்) 16:26, 13 சூலை 2025 (UTC)Reply
- @சா அருணாசலம் நீங்கள் எந்த இலக்கண இலக்கிய ஆதாரத்தின் அடிப்படையில் இப்படித் தன்னிலை விளக்கம் தருகிறீர்களெனத் தெரியாது. சும்மா நினைத்தவாறெல்லாம் விளக்கம் தர முடியாது. சரியான இலக்கியப் பயன்பாட்டை ஆதாரமாகக் காட்டுங்கள். மற்றப்படி, அது வெறும் பொய் மட்டுமே. பாஹிம் (பேச்சு) 00:11, 14 சூலை 2025 (UTC)Reply
- கட்டு+இடம்
- நிலைமொழியில் வரும் உயிர்மெய் எழுத்து டு என்பது உகரச்சொல். வருமொழியில் வரும் உயிரெழுத்து இ வருகையில் (டு =ட்+உ) உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும் எனும் விதிப்படி உ என்ற எழுத்து நீங்கி கட்+ட்+இடம் என்றாகும். உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே ட் என்ற எழுத்தையும் இ என்ற எழுத்தையும் சேர்த்தால் டி என்ற எழுத்தாக மாறிக் கட்டிடம் என்றாகும்.
- கட்டு+அடம்
- நிலைமொழியில் வரும் டு என்ற உயிர்மெய் எழுத்து, உகரச்
- சொல். வருமொழியில் அ என்ற உயிரெழுத்து வருகையில் நிலைமொழியில் (டு=ட்+உ) உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும் எனும் விதிப்படி உ என்ற எழுத்து நீங்கி கட்+ட்+அடம் என்றாகும். உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி நிலைமொழியில் ட் என்ற எழுத்தும், வருமொழியில் உள்ள அ என்ற எழுத்தும் இணைந்து ட என்ற மாற்றத்துடன் கட்டடம் என்றாகும்.-- சா. அருணாசலம் (உரையாடல்) 06:41, 14 சூலை 2025 (UTC)Reply
- @சா அருணாசலம் நான் இலக்கண விளக்கம் கேட்கவில்லை. நான் கேட்டது பொருள் விளக்கம். அடம் என்றால் அடுக்கு என்று சொல்வதற்குரிய அடிப்படை என்ன? நீங்கள் இல்லாத ஒரு பொருளை இருப்பதாகக் கூறி எப்படித் தவறாக விளக்கம் தரலாம்? கட்டிடம் என்பது எக்கருத்திற் பிழையாகும்? இலக்கிய ஆதாரத்தின் படி கூறுங்கள். தன்னிலை விளக்கம் வேண்டாம். பாஹிம் (பேச்சு) 01:00, 15 சூலை 2025 (UTC)Reply
- @Fahimrazick: நீங்கள் கூறியவற்றில் இருந்து கேட்கிறேன். 1. //கட்டிடம், கட்டடம் என்பது தேவையற்ற உரையாடல். அதில் இரண்டும் சரி. சிலர் வேண்டுமென்று தம் கருத்ததைத் திணிக்க முயல்வதே தவிர அதற்கு எந்த இலக்கண, இலக்கிய அடிப்படையுமில்லை.// இரண்டும் சரி என்பதற்கு நீங்கள் இலக்கிய ஆதாரத்தின் படி கூறுங்கள்.
- 2.//கட்டிடம் என்பது எக்கருத்திற் பிழையாகும்? // இதுதான் சரி என்பதற்கு இலக்கிய ஆதாரத்தின் படி கூறுங்கள். நன்றி. தன்னிலை விளக்கம் வேண்டவே வேண்டாம்.-- சா. அருணாசலம் (உரையாடல்) 03:36, 15 சூலை 2025 (UTC)Reply
- @சா அருணாசலம் சரியானதைப் பிழையென்பவர் தான் ஆதாரத்தின் படி பதில் கூற வேண்டும். இல்லையென்றால் அது வெற்றுப் பேச்சு. அவ்வளவு தான். கட்டிடம் என்பது பிழையென்று நீங்கள் தானே கூறுகிறீர்கள். அது எப்படிப் பிழையென்று நிறுவுங்கள். அப்படி நிறுவ முடியாவிடின், அது வெற்றுப் பேச்சு என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். பாஹிம் (பேச்சு) 04:56, 15 சூலை 2025 (UTC)Reply
- @Fahimrazick: நீங்கள் எந்த இலக்கண, இலக்கிய அடிப்படையுமில்லை. என்றீர். இலக்கண விளக்கம் கொடுத்தேன். நான் கூறியவற்றை எல்லாம் தன்னிலை விளக்கம் என்றீர். அப்படியென்றால் நீங்கள் கூறுவதும் தன்னிலை விளக்கமே ஆகும். கட்டிடம் என்றால் கட்டடம் கட்டுகின்ற இடம். கட்டடம் என்பது கட்டடத்தை மட்டுமே குறிக்கும். கட்டுகின்ற இடத்தைக் குறிக்காது. உங்களின் இந்த மனநிலை தான் பிடிவாதம், அடம், கேள்வியை அடுக்கிக் கொண்டே செல்லுதல். இதுபோலத்தான் கட்டடம் என்பதும் அடுக்கி அடுக்கி கட்டுவதால் கட்டடம். கட்டிடம் என்பது கட்டடம் கட்டப்படுகின்ற இடம். அது வெறும் இடம் மட்டுமே. நன்றி வணக்கம்.-- சா. அருணாசலம் (உரையாடல்) 05:32, 15 சூலை 2025 (UTC)Reply
- @சா அருணாசலம் முதலில் பொய்யாக விளக்கம் கொடுத்தது நீங்கள். நானல்லன். கட்டிடம் என்பது பிழை என்றீர். எந்த அடிப்படையில் பிழையெனக் கேட்டால் தொடர்பேயில்லாத எதையெதையோ சொல்கிறீர்கள். அது தான் முறையா? பாஹிம் (பேச்சு) 13:13, 15 சூலை 2025 (UTC)Reply