பேச்சு:கம்பு உணவுகள்

கம்பஞ்சோறும் (கம்மஞ்சோறு என்றும் பேச்சுவழக்கில் கூறுவதுண்டு), கம்பங்கஞ்சியும் இன்றும் உண்டு. மிக அருகி வருகிறது. நான் கம்பஞ்சோற்றை கடந்த ஆண்டிலும் உண்டிருக்கின்றேன். புளி, பருப்புத் தொகையல் வைத்தும், மோர்க்குழம்பு கலந்தும் உண்பதுண்டு. மோரில் நொய்யக் கரைத்தும் உண்பதுண்டு. சிறிதளவே உண்டாலும் நெடுநேரம் பசியைக் கட்டும் பண்பு கொண்டது (என் துய்ப்பறிவின் அடிப்படையிலும், வேறுசிலர் கூறி உறுதி செய்ததையும் வைத்தே இதனைக் கூறுகின்றேன். அறிவியல் முறையில் நிறுவியதாகக் கூறவில்லை). இக்கட்டுரையை மாற்றி, விக்கிக்கு ஏற்ற வகையில் எழுதவேண்டும். --செல்வா 21:28, 21 நவம்பர் 2010 (UTC)Reply

  • கடந்த 6 ஆண்டுகளாகத் தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் சாலையோரங்களில் பலர் தள்ளுவண்டிகளில் கம்பங்கஞ்சி விற்பனை செய்து வருகின்றனர். இந்தக் கடைகளில் கம்பங் கஞ்சிக்கு துணை உணவாக சீனி அவரை வற்றல், மோர் மிளகாய் வற்றல், சில வகை ஊறுகாய் போன்றவை அளிக்கப்படுகிறது. இந்தக் கம்பங் கஞ்சிக்கு வாடிக்கையாளர்கள் அதிகமாக உள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டும். --தேனி.எம்.சுப்பிரமணி. 09:47, 22 நவம்பர் 2010 (UTC)Reply

சோ.பா! கருவாட்டினை/மாவடுவை விட்டு விட்டீர்களே!சேர்த்தால் ருசி தூக்கலாக இருக்குமே.07:05, 11 சூலை 2011 (UTC)உழவன்+உரை..

எழுதியது நானில்லை புதிய பயனர். (என்னால் கம்பு உணவுகள் எதனையும் உண்ண முடிவதில்லை :-))--சோடாபாட்டில்உரையாடுக 07:13, 11 சூலை 2011 (UTC)Reply
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya