பேச்சு:கற்றாழை

கற்றாழை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

மூலவருத்தக் காரருக்கு கற்றாழை தெய்வம் போல. கற்றாழையின் தோலை நீக்கித் துண்டு துண்டாக வெட்டி, மணம் போவதற்கு, ஏழு தண்ணீரில் கழுவி கோப்பையில் போட்டால் மிகவும் அழகாக பளிங்குக் கற்கள் போல் பளபளக்கும். அதை மூலவருத்தக்காரர் காலை எழுந்தவுடன் வெறு வயிற்றில் சாப்பிட வேண்டும். வாய்க்குள் போட்டால் அப்படியே வழுக்கிக் கொண்டு போகுமாம்.ஆனால் அதன் சுவையில் உண்பவரின் முகம் கோணலாகிப் போகும். சொல்லி வைத்து மூன்று மாதத்தில் வருத்தம் மாறி விடுமாம். மூலவருத்தக்காரர் வந்தால் எனது பூட்டப்பா (பரியாரியார்) இந்தக் கற்றாழையை சுத்தப் படுத்தி இரு கோப்பைகளில் போடுவார். ஒன்று வெறுவயிற்றில் சாப்பிடவாம். மற்றது வீட்டுக்குக் கொண்டு போய் வெங்காயமும் போட்டு நல்லெண்ணெயில் பொரித்து சோற்றுடன் மதியச் சாப்பாடாகச் சாப்பிட வேண்டுமாம். மூலவருத்தம் இந்த விதமாகக் கற்றாழையை உண்பதனால் மூன்றே மூன்று மாதத்தில் குணப்படுத்தப் படுவது நான் சின்னவயதிலேயே அறிந்து கொண்ட உண்மை.--Chandravathanaa 14:07, 24 ஏப்ரல் 2010 (UTC)Reply

கற்றாழை மருத்துவர்கள்

கற்றாழையைக் காண்பித்து மருத்துவம் பார்க்கும் பரம்பரை மருத்துவர்கள் தமிழகத்தில் அதிகம். கற்றாழை தண்டு சுவரில் சுண்ணாம்பு அடிக்க பயன் படுத்துகிறார்கள்,னார்கள் என்று நினைக்கிறேன். -- மாஹிர் 11:41, 1 மே 2010 (UTC)Reply

பாராட்டு

பார்வதி, நீங்கள் மிக நன்றாக இதனை விரித்து எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள். இது மிகவும் முக்கியமான தாவரங்களில் ஒன்றாகையால் நானும் விரித்து எழுத நினைத்திருந்தேன். இக்கட்டுரையைச் சிறப்புக் கட்டுரைகளில் ஒன்றாக ஆக்குவது மிக நல்லதாகும். நானும் விரைவில் வந்து மேம்படுத்த உதவுகின்றேன். --செல்வா (பேச்சு) 17:38, 28 சூலை 2012 (UTC)Reply


கூகுள் மொழிபெயர்ப்பு கருவிமூலம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட இந்தக் கட்டுரை உரைதிருத்தம் செய்யப்பட்டது-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:51, 29 சூலை 2012 (UTC)Reply

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya