பேச்சு:கல்சியம்வலுவான பற்களுக்கும், வலுவான எலும்புகளுக்கும் கால்சியம் அதிக அளவில் தேவைப்படுகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) நோயைத் தவிர்க்கவும் கால்சியம் தேவைப்படுகிறது. இதற்காக தினசரி தேவைப்படும் அளவை சமீபத்தில் கூட்டி அறிவித்துள்ளார்கள். சாதாரணமாக மூன்று அல்லது நான்கு டம்ளர் ஸ்கிம்டு பாலில் ஒரு நாளின் தேவை கிடைக்கும். அபாய அளவைத் தாண்டினால் மலச்சிக்கலும், சிறுநீரகக் கோளாறுகளும் உருவாகலாம்.
--Umapathy 00:19, 30 செப்டெம்பர் 2006 (UTC) இலங்கை வழக்கை கட்டுரைத் தலைப்பாகக் கொள்ளக் கூடாது என்ற நடைமுறை ஏதாவது இருக்கிறதா?--கோபி 03:50, 30 செப்டெம்பர் 2006 (UTC) இலங்கை வழக்கை கட்டுரைத் தலைப்பாக கொள்ளக்கூடாது என்று நடைமுறை எல்லாம் இல்லை. வேறு சில கட்டுரைகளில், இலங்கை வழக்கே முதன்மைத் தலைப்பாக இருப்பதும் கவனிக்கத்தக்கது. கல்சியம் என்பதை விட கால்சியம் என்பது ஆங்கில வழக்குக்கு கொஞ்சம் ஒத்து வருவது போல் உள்ளது. தவிர, கல்சியம் என்றால் தமிழ்நாட்டில் புரிந்து கொள்வார்களா என்பது கேள்விக்குரியது--ரவி 08:22, 30 செப்டெம்பர் 2006 (UTC)
உமாபதி, நிச்சயம் மயூரனாதனின் கருத்து அறியாமல் நகர்த்தப்போவதில்லை. இலங்கை இசுலாமியர்கள் குறித்த உரையாடல், இக்கட்டுரைக்கு தொடர்பற்றது. அதை இங்கு தொடர்ந்த் உரையாடாமல் விட்டுவிடுவோம். உதாரணம் என்று சொல் எடுத்துக்காட்டு என்ற பொருளில் தமிழ்நாட்டிலும் புழக்கத்தில் இருக்கிறது. பிற தென்னிந்திய மொழிகளிலும் வழங்குகிறது. வடமொழி மூலமாக இருக்கலாம். இலங்கை ஆசிரியர்கள் குறித்த செய்தி புதிது. ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ இலங்கைக்கு வெளியே இச்சொல் இப்படியும் வழங்கப்படுகிறது என்ற பரிச்சயத்தை உருவாக்கவாவது விக்கிபீடியா உதவுமே !--ரவி 08:52, 1 அக்டோபர் 2006 (UTC)
செல்வா, உமாபதி, உங்களது கருத்துக்கு அதிக மறுப்புக்கள் என்னிடமில்லை. ஆனால் american english, british english என்று இருப்பது போல தமிழகத் தமிழ், ஈழத்தமிழ் என்ற வேறுபாடு நிச்சயம் இருக்கிறது. ஆனால் ஈழம் தமிழர்கள் வாழ முடியாததொன்றாக மாறிவருவதால் குறித்த மொழிக்கூறுகளைத் தக்கவைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கல்சியம் என்பதை தமிழகத்தவருக்கு எவ்வாறு விளங்கிக் கொள்ள முடியாதோ அவ்வாறுதான் கால்சியம் என்பதை இலங்கையிற் கற்றவருக்கு விளங்கிக்கொள்ள முடியாது. மிகப்பெரும்பான்மையான தமிழர்கள் விளங்கிக்கொள்ளுமாறு எழுத்தொலிப்பெயர்ப்புகள் இருப்பது நம் எல்லோருக்கும் நல்லது என்பது ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளக் கூடிய விவாதம் தானென்றாலும் ஒர் ஈழத்தமிழனை உணர்வுபூர்வமாகப் பாதிக்கக்கூடியதாகும். நாம் இலங்கையின் சிறுபான்மையினர். தமிழர் சிங்களம் கற்பது இனப்பிரச்சினைக்குத் தீர்வுதரும் என்று எண்ணிக்கையிற் குறைவைச் சுட்டிக் காட்டிச் சிங்களவர் கூறும் விளக்கங்களைக் கேட்டுச் சலித்துள்ளோம். எல்லா இடங்களிலும் எமது மொழி புறக்கணிக்கப்பட்டு வருகிறது. மொழி எமக்கு உணர்வுபூர்வமானது; மிகவும் உணர்வுபூர்வமானது. ஈழத்தமிழர் இன்றல்ல; இன்னும் பல்லாண்டுகளுக்கு எற்கத் தயங்குவார்கள். பொதுப் பயன்பாட்டிற்குச் சீர் தரம் செய்தல் மிகவும் அவசியம், உண்மைதான். ஆனால் பல்லாண்டுகளுக்கு முன்னர் செய்திருக்க வேண்டியதொன்றை இணையத்தின் வருகைதான் அவசியமாக்கியிருக்கிறது. ஏனென்றால் ஈழத்தில் ஐதரசன், நைதரசன், ஒட்சிசன், கல்சியம் போன்ற சொற்கள் உருவாக்கப்பட்ட அண்மையிலல்ல. எழுபதுகளின் முன்பேயே உருவாக்கப்பட்டுத் தொடர்ந்து பயன்பாட்டிலுள்ளன. எல்லா வயதினரும் விளங்கிக் கொள்பவையாக உள்ளன. இந்த உரையாடலுக்குச் சம்பந்தமில்லையெனினும் சிறுவிடயமொன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ரயர், டயர் :-)). நற்கீரன் தன் பெயரை Natkeeran என்றே எழுதுகிறார்.... செல்வா, இவ்விடயம் தொடர்பில் விவாதம் வேண்டாம். இப்பொழுது இவ்வளவுடன் விட்டுவிடுவோம். ஏனெனில் நாம் உழைக்க வேண்டிய விடயப்பரப்புக்கள் அதிகம். பின்னோரு தடவை உரையாடுவோம். தமிழுக்கும் தமிழருக்கும் எது நல்லது என்ற கோணத்திற் பார்க்க வேண்டும் என்பதே என் அபிப்பிராயமும். அதில் எமக்குள் கருத்துவேறுபாடில்லைத்தானே :-) நன்றி.--கோபி 16:18, 1 அக்டோபர் 2006 (UTC) கல்சியம் என்பதே சரிஇங்கே சில உரையாடல்கள் நடந்து கால்சியம் என்று கூற வேண்டும் என்றவாறு பிழையான கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆங்கிலத்தில் க ஓசைக்கும் கெ ஓசைக்கும் இடைப்பட்ட ஓசையிலும் குறிலாகவும் மட்டுமே மொழியப்படுகிறது. பார்க்க, கல்சியம். எனவே, கல்சியம் என்று கூறுவதே சரி. கால்சியம் என்பது முற்றிலும் பிழை.--பாஹிம் (பேச்சு) 02:27, 27 செப்டம்பர் 2021 (UTC) |
Portal di Ensiklopedia Dunia