பேச்சு:காத்தவராயன் கதை

இது காத்தவராயன் கதை அலது காத்தவராயன் கூத்து என்றே அறியப்படுகிறது. காத்தவராயன் பற்றித் தனிக் கட்டுரை வேறு விதமாக எழுதப்படலாம்.--Kanags \உரையாடுக 12:21, 3 செப்டம்பர் 2013 (UTC)

காத்தவராயன் கூத்தினைப் பற்றி கட்டுரை உரைக்குமானால் கூத்து நடைபெறும் விதம், மற்றும் உடை தேர்வு நடிகர்கள் பற்றிய அனைத்தும் இடம் பெறுதல் வேண்டும். ஆனால் கதை என்ற அளவில் மட்டும் இக்கட்டுரை உள்ளது. கூத்து எப்பொழுது நடைபெறுகிது, எந்த சமூகத்தினர் நடத்துகின்றனர் என்பதைப் பற்றிய விவரங்கள் இல்லை. திருச்சியை சுற்றி கூறப்படும் ஒரு கதையாகவே இக்கட்டுரை முன்னெடுக்கப்பட்டுள்ளது. தாங்கள் கூறியபடி காத்தவராயன் பற்றிய தனிக்கட்டுரையில் எழுதினால் தற்போது இதிலுள்ள சாரமே அதிலும் இருக்கும். கூத்தினைப் பற்றிய சிறுகுறிப்புடன் இக்கட்டுரையே தனிக்கட்டுரையாக மாற்றலாம். ஆலோசிக்கவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:32, 3 செப்டம்பர் 2013 (UTC)
கூத்து பற்றி நிறைய எழுதலாம். தகவல் சேகரிக்கக் கூடியதாக இருக்கும். பார்ப்போம்.--Kanags \உரையாடுக 12:34, 3 செப்டம்பர் 2013 (UTC)
நானும் தேடிப்பார்க்கிறேன் நண்பரே.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:43, 4 செப்டம்பர் 2013 (UTC)
காத்தவராயன் கூத்து பற்றிய தகவல்கள் நான் சுட்டிய மேற்கோள்களில் இல்லை. ஆனால் இது பரந்து நிகழ்த்தப்படும் ஒரு கூற்று. காத்தவராயன் நாடகம் என்ற ஒன்றும் உண்டும். ஆனால் அதன் கதை வேறு. --Natkeeran (பேச்சு) 13:07, 4 செப்டம்பர் 2013 (UTC)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya