பேச்சு:செயற்கைக்கோள்செயற்கைமதி தமிழக பொதுவழக்கில் இல்லாத ஒரு சொல். அதை விடுத்து தமிழகத்தில் பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள் பயன்படுத்தலாம். மேலும் செயற்கைமதி அல்லது செய்மதி என்பது Artificial(செயற்கை) Intelligence(மதி) என்ற சொல்லின் தமிழாக்கமாக இருப்பது இன்னும் பொருந்தும். வினோத் 18:15, 29 நவம்பர் 2007 (UTC) சர்வதேச விண்வெளி நிலையம் ஒரு Space Station. செயற்கைகோள் என்ற பாகுபாட்டின் இது வராது. வினோத் 05:27, 30 நவம்பர் 2007 (UTC) செயற்கைக்கோள் என்பது ஒரே சொல்லாகவே பயன்படுத்தப்படுகிறது. எனவே தலைப்பை செயற்கைக்கோள் என மாற்றியுள்ளேன் வினோத் 07:18, 30 நவம்பர் 2007 (UTC) செயற்கைக்கோள் என்பது ஈழத்திலும் அறிமுகமான சொல்தான். ஆனால் செய்மதி என்பதே பொருத்தமானது. கோள் சூரியனைச் சுற்றி வருவது; மதி (சந்திரன்) பூமி போன்ற கோள்களைச் சுற்றிவருவது. அவ்வகையில் செய்மதி என்பதே பொருத்தமானது. ஆட்சேபணையில்லையெனின் செய்மதியை முதன்மைப்படுத்தப் பரிந்துரைக்கிறேன். கோபி 15:54, 30 நவம்பர் 2007 (UTC) மதி என்பதற்கு அறிவு என்ற பொருளை நீங்கள் மறந்துவிட்டீர்கள் போல. மதி என்றால் எல்லாருக்கும் முதலில் படுவது அறிவு என்ற பொருள்தான். மேலும் ஈழத்திலும் செயற்கைகோள் வழக்கில் இருக்கிறது, தமிழகத்தில் செயற்கைகோள்தான் பொதுவழக்கு(செய்மதி என்றால் யாருக்கும் தெரியாது.எனக்கே கூட செய்மதி தொலைபேசி என்பது முதலில் புரியவில்லை. செயற்க்கைக்கோள் கட்டுரையை கண்டவுடன் தான் எனக்கு புரிந்தது) எனவே செயற்கைக்கோள் என பயன்படுத்தலாம். வினோத் 16:38, 30 நவம்பர் 2007 (UTC) plutoவையே கோள் இல்லை என்று சொல்லி விட்டார்கள் ;) ஆதலால், நாம் ஏவுவனவற்றைக் கோள் என அழைக்கலாகாது..செய்மதி bbc tamil போன்ற தளங்களில் புழக்கத்தில் இருக்கிறது. எனினும் தமிழகத்தில் அறியப்படாத சொல் தான். பெரும்பான்மைப் பொதுவழக்குச் சொல்லா? பொருள் பொதிந்த மறுவழக்குச் சொல்லா என்பது சிந்தனைக்குரியது !--ரவி 16:43, 30 நவம்பர் 2007 (UTC)
கோபி சொல்வதும் உண்மை. செயற்கைக்கோள் என்பது தவறான சொல்லாட்சி. தலைப்பிலும் கட்டுரைக்குள்ளும் சரியான சொல்லாட்சியை முன்னிலைப்படுத்துதல் நல்லது. செய்மதி/செயற்கைமதி என்பதில் வினோத் கூறும் செயற்கை "அறிவுத்திறன்" என்னும் பொருள் வரக்கூடும். மதி = அறிவுத்திறன், என்பது சமசுகிருத-வழியான பொருள். ஆனால் மதி = நிலா என்பது தமிழ்-வழிப் பொருள். மதி--> மாதம் என்று மொழியறிஞர் தேவநேயப்பாவாணர் கூறியுள்ளார். ஆனால் மதி என்னும் சொல், பொருள் மயக்கம் தரவல்லது என்பது உண்மை.யே செயற்கை அறிவுத்திறனுக்கு எல்லா இடங்களிலும் வேறு சொல்லைஆண்டால், பொருள் மயக்கம் குறையும். ஒருசொல்லுக்குப் பல பொருள்கள் இருப்பது மிக இயல்பான ஒன்றே (அறிவியல் கலைச்சொற்களும் சேர்த்தியே). எனவே செய்மதி என்பது தவறல்ல (அருமையான சொல்). போதிய ஒப்புணர்வு இங்கு இல்லை எனில் செயற்கைநிலா, செய்நிலா எனலாம். எவ்வாறாயினும், செயற்கைக்கோள் என்னும் சொல் தவறானது (வரலாற்று முன்பதிவுகள் இருப்பினும், எனவே மாற்றவேண்டிய ஒன்று; இது பற்றி கட்டுரையிலும் குறிக்கலாம்).--செல்வா 23:23, 20 மார்ச் 2008 (UTC) செயற்கைக்கோள் - சொற்பயன்பாடு சரியேகோள் என்பது தமிழ்ச் சொல் ஆங்கிலத்தில் கூறப்படும் planet எனப்படும் சொல்லுக்கு நேர் நிகரானது இது என்று எடுத்துக்கொள்ள இயலாது. காலாகாலமாக தமிழர்கள் கோள் எனும் சொல்லை சந்திரனை மட்டுமல்லாமல் ராகு, கேது போன்ற நிழல் கிரகங்களைக் (equniox) குறிக்கவும் பயன்படுத்தியுள்ளனர். கோளறு பதிகம் என்பது தேவாரப் பாட்டு. இதில் சந்திரன் சூரியன் போன்றவை கோள் என்றே குறிக்கப்படுகின்றன. கோள் என்பது விண்ணில் வலம் வரும் ஒரு பொருள் என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் உள்ள planet எனும் சொல்லும் ஆரம்பத்தில் சந்திரனையும், சூரியனையும் கூடக் குறிக்கப் பயன்பட்டது. ஆங்கிலத்தில் உள்ள satellite எனும் சொல்லின் உண்மை பொருள் ஒரு கோளைச் சுற்றி வரும் இன்னொரு கோள் என்பதே. எனவே செயற்கைக்கோள் எனும் சொற்பயன்பாடு சரியே. −முன்நிற்கும் கருத்து Shaan (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
|
Portal di Ensiklopedia Dunia