பேச்சு:சேலம் அறிவு தொழில்நுட்ப நிறுவனம்

@Gowtham Sampath: இக்கட்டுரை ஏன் ஒரே நாளில் எந்த அறிவிப்பும் இன்றி நீக்கப்பட்டுள்ளது? இன்று புதுப்பயனர் நடமாட்டம் அதிகம் இருப்பது ஏதேனும் பயிற்சிப் பட்டறைகள் நடக்கலாம் என்பதைக் காட்டும் வகையில் உள்ளது. இவ்வாறு உடனே நீக்குவது புதுப்பயனர்களை ஊக்கம் குன்ற வைக்கலாம். பார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:துரித நீக்கல் தகுதிகள்#கொள்கை மீளாய்வு--இரவி (பேச்சு) 17:39, 7 நவம்பர் 2019 (UTC)Reply

@Ravidreams: மேலே உள்ள விதிமுறைகளை, இப்போது தானே கொண்டு வந்தீர்கள். இனிமேல் கட்டுரைகளுக்கு கால அவகாசம் தருகிறேன். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 20:23, 7 நவம்பர் 2019 (UTC)Reply
மேலே உள்ள பக்கத்தில் கொள்கை மீளாய்வு உரையாடல் நடைபெறுகிறது. அந்த உரையாடலை ஒரு தகவலுக்குத் தந்தேனே தவிர, அதன் பொருட்டு உங்கள் செயற்பாட்டை இங்கு மீளாய்வு செய்யுங்கள் என்று கேட்கவில்லை. உண்மையிலேயே, இக்கட்டுரையைக் கலைக்களஞ்சியத் தன்மை அற்றது என்று ஏன் கருதினீர்கள், இது போல் எத்தனைக் கட்டுரைகளை எந்த அறிவிப்பும் இன்றி உடனே நீக்கியுள்ளீர்கள் என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஒரு புதுப்பயனரின் கட்டுரையை இப்படி நீக்குவதிலேயே குறியாக இருந்தால் புதிய பயனர்களை ஈர்க்க முடியாது. நீங்களும் ஒரு காலத்தில் புதுப்பயனராக இருந்ததை ஒப்பிட்டுப் பார்க்கலாம். உங்களின் மறுமொழிகள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஒரு வித எரிச்சல் மனப்பான்மையுடனே வருவதாக எனக்குத் தோன்றுகிறது. கனிவுடன் உரையாடுவது உதவும். நன்றி. --இரவி (பேச்சு) 20:44, 7 நவம்பர் 2019 (UTC)Reply
@Ravidreams: நீங்கள் சொல்வது சரிதான், நான் இக்கருத்தை ஏற்கிறேன். ஒரு புது பயனர் எழுதும் கட்டுரையானது, கலைக்களஞ்சிய நடைமுறையில் இல்லாத பட்சத்தில், அதை நீக்கினால், புதிய பயனர்களுக்கு அதிருப்தியையும் ஏற்படுத்தும், அதே வேளையில் புதிய பயனர்களை ஈர்க்க முடியாது. சரிதான் இதை நான் ஏற்கிறேன். சரி இவ்வாறு இவர்கள் எழுதும் கட்டுரைகளை யார் துப்புரவு செய்வது?? யார் விக்கியாக்கம் செய்வது?? இந்த மாதிரி ஏராளமாக பல கட்டுரைகள் இன்னும் உள்ளது?? அதுமட்டுமில்லாமல் கூகுள் மொழிபெயர்ப்பு கட்டுரை வேற உள்ளது?? அதையெல்லாம் யார் சரி செய்வது?? -- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 21:03, 7 நவம்பர் 2019 (UTC)Reply
பொதுவாக {{Possible New user Article}} என்கிற வார்ப்புருவை உருவாக்கி இடலாமா ? //அதுமட்டுமில்லாமல் கூகுள் மொழிபெயர்ப்பு கட்டுரை வேற உள்ளது?//உடனடியாக நீக்க வேண்டும் .--Commons sibi (பேச்சு) 07:17, 8 நவம்பர் 2019 (UTC)Reply
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya