பேச்சு:பழனிசெட்டிபட்டி அணைஇந்த அணையின் கீழாக வரும் முல்லைப் பெரியாறு ஆற்றில்தான் நீச்சல் கற்றுக் கொண்டேன். கோடை விடுமுறையில் காலைச் சாப்பாட்டிற்குப் பின்பு எங்கள் தெரு நண்பர்களுடன் சேர்ந்து வீட்டை விட்டுக் கிளம்பினால், ஆற்றுப்பக்கம் பொழுது போவதே தெரியாது. ஆற்றுப் பக்கமாகச் சுற்றித் திரிதல், ஆற்றில் குளித்தல், சிறிது நேரம் ஆற்றங்கரையில் இருக்கும் மணலில் படுத்து உருளுதல், நண்பர்களுடன் சேர்ந்து மீன்பிடித்தல், அந்த மீனைச் சுட்டுச் சாப்பிடுதல், தண்ணீர்ப் பாம்புகளைப் பிடித்து அடித்துக் கொல்வது என்று எத்தனையோ குறும்புகள்... மாலை ஆறு மணிக்குப் பின்பு வீடு திரும்பும் போது எங்கள் நிறமே சாம்பல் நிறமாகிவிடும். தண்ணீரில் ஊறி வெளுத்துப் போய் இருக்கும் எனது சாம்பல் நிறத்தைப் பார்த்து என் அம்மாவும் என்னை அடி வெளுத்து வாங்கி விடுவார். (மதியம் சாப்பிடாததற்கும் சேர்த்துத்தான்)******* |
Portal di Ensiklopedia Dunia