பேராவரம்
பேராவரம் (Peravaram) என்பது இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்[1]. ராசமுந்திரி நகரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் காக்கிநாடா நகரிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவிலும் 16°50′2.97″ வடக்கு 81°47′12.85″ கிழக்கு கிழக்கு என்ற ஆள்கூறுகள் அடையாளத்தில் பேராவரம் கிராமம் அமைந்துள்ளது. 2001 ஆம் ஆண்டு இந்திய நாட்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி[2] இக்கிராமத்தின் மக்கள் தொகை 4000 ஆகும். கிழக்கில் கோதாவரி ஆறும், மேற்கில் பிரதானமான கால்வாயும், வடக்கில் போபர்லங்கா கிராமமும் தெற்கில் பயிர் நிலங்களும் பேராவரத்திற்கு எல்லைகளாக உள்ளன. மேலும் இக்கிராமத்தில் குடிக்கத்தக்க குடிநீர் வசதி, நீர்ப்பாசண கால்வாய்கள், வடிகால் வசதிகள், பஞ்சாயத்து, கால்நடை மருத்துவமணை, பதிவுபெற்ற மருத்துவ அலுவலர்கள், இந்திரம்மா வீட்டுவசதி குடியிருப்புகள், இரண்டு தொடக்கப் பள்ளிகள் மற்றும் ஒரு உயர்நிலைப் பள்ளியென பல்வேறு வசதிகளைக் கொண்டிருக்கிறது. பொருளாதாரம்இப்பகுதி முழுவதும் விவசாயம் முக்கியத் தொழிலாக இருக்கிறது. பேராவரத்தின் கிழக்கில் உலர்நிலங்களும் மேற்கில் ஈரநிலங்களும் விவசாயத்திற்கு உதவி செய்கின்றன. நெற்பயிரும் உளுந்தும் ஈரநிலங்களில் பயிரிடப்படுகிறது. மக்காச் சோளம் உலர் நிலங்களில் பயிர் செய்யப்படுகிறது. ராபி பயிர்களுக்கான நீர்பாசனத்தை மேற்கு கோதாவரி கால்வாய் வழங்காத காரணத்தால், கோடைகாலத்தில் நிலங்கள் பயிரிடப்படாமல் வெற்று நிலங்களாக விடப்படுகின்றன. கோதாவரி ஆற்றங்கரை முழுவதும் பெரும்பாலும் நீர் உயிரின வளர்ப்பாக இறால் வளர்க்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவை தவிர பாலுற்பத்தி, கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு போன்ற தொழில்களும் உபதொழில்களாக பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுகின்றன. இக்கிராமம் கோணாசீமா வடிநிலப் பகுதியாக இருப்பதால் ஆண்டு முழுவதும் போதுமான அளவுக்கு நீர்ப்பாசண வசதியைப் பெற்று செழிப்புடன் காணப்படுகிறது. மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia