பேர்ட்மேன் (திரைப்படம்)
பேர்ட்மேன் (Birdman) அல்லது தி அன்னெக்சுபெக்டட் வெர்ச்சூ ஆஃப் இக்னொரென்சு (The Unexpected Virtue of Ignorance) 2014ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க எதிர்மறை நகைச்சுவை திரைப்படமாகும். இதனை அலெயாண்ரோ கோன்சாலசு இன்யாரிட்டு எழுதி, இயக்கித் தயாரித்துள்ளார். 87வது 2015 ஆசுக்கார் விருதுகளில் இத்திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் முதன்மை வேடத்தில் மைக்கேல் கீட்டனும் துணைவேடங்களில் சாக் கலிபியானகிசு, எட்வர்டு நார்டன், ஆண்ட்ரியா ரைசுபரோ, அமை ரியான், எம்மா ஸ்டோன், மற்றும் நவோமி வாட்ஸ் நடித்துள்ளனர். பேர்ட்மேன் என்ற சூப்பர்ஹீரோ வேடத்தில் புகழ்பெற்றிருந்த ஆலிவுட் நடிகர் ரிக்கன் தாம்சன் தமது புகழ்மங்கிய நிலையில் ரேமண்டு கார்வர் சிறுகதையை தழுவி நாடகமொன்றை பிராட்வேயில் அரங்கேற்ற முயல்வதை திரைப்படம் விவரிக்கின்றது. மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia