பைசண்டைன் கட்டிடக்கலைபைசண்டைன் கட்டிடக்கலை (Byzantine architecture) என்பது, பைசண்டைன் பேரரசு காலத்தில் உருவாகி வளர்ந்த ஒரு கட்டிடக்கலைப் பாணியாகும். கி.பி 330ல், கொன்ஸ்டண்டைன், உரோமப் பேரரசின் தலைநகரத்தை பைசண்டியத்துக்கு மாற்றியதுடன் பைசண்டைன் பேரரசு உதயமானது. இந்த பைசண்டியம் என்றபெயர் பின்னர் கொன்ஸ்டண்டினோப்பிள் என்று மாற்றப்பட்டது. தற்போது இதுவே இஸ்தான்புல் என வழங்குகிறது. பளிங்குக் கற்கள் அல்லது அதன் வண்ணத்திலான கற்களினால் உள்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும், கல் மற்றும் செங்கற்களும் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன.[1] ஆரம்பகால பைசண்டைன் கட்டிடக்கலை, உரோமக் கட்டிடக்கலையின் தொடர்ச்சியாகவே இருந்தது. இக் காலக் கட்டிடக்கலைக்கு உதாரணங்களாக, பைசண்டியம் சுவர்கள், யெரெபாட்டன் சரே என்பன விளங்குகின்றன. ![]() அண்மைக் கிழக்கு நாடுகளின் கட்டிடக்கலைச் செல்வாக்கினால், படிப்படியாகப் புதிய பாணியொன்று உருவாகத் தொடங்கியது. அத்துடன், கிறிஸ்தவ ஆலயக் கட்டிடக்கலையில் இன்றுவரை பின்பற்றப்படும், கிரேக்க சிலுவைக் கிடைப்பட வடிவம் பின்பற்றப்பட்டது. கற்களுக்குப் பதிலாகச் செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன. கிளாசிக்கல் ஒழுங்குகள் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டன. வளைவான அலங்காரங்களுக்குப் பதில் மொசைக்குகள் பயன்படுத்தப்பட்டன. குவிமாடங்களைத்(dome) தாங்குவதற்காகப் பெண்டெண்டிவ் என வழங்கப்படும் புதிய முறையொன்று அறிமுகம் செய்யப்பட்டது. இறுதியில் பைசண்டைன் கட்டிடக்கலை, ரோமனெஸ்க் மற்றும் கோதிக் (Gothic) கட்டிடக்கலைகளுக்கு இடம் விட்டு ஒதுங்கியது. கிழக்கில் இது, ஆரம்பகால இஸ்லாமியக் கட்டிடக்கலையில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டிருந்தது. டமாஸ்கஸில் உள்ள உம்மாயாட் பெரிய பள்ளிவாசல், மற்றும் ஜெரூசலத்தில் உள்ள டோம் ஒப் த ரொக் (Dome of the Rock) என்பன சிறந்த உதாரணங்களாகும். ![]() பைசண்டைன் கட்டிடக்கலைக்குச் சிறந்த உதாரணங்களாக விளங்குவன: தற்கால எகிப்தில் தற்கால கிரீசில் தற்கால இத்தாலியில் தற்காலத் துருக்கியில் தற்கால உக்ரேனில் மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia