பொக்காலி (நெல்)

கேரளத்தின் வெச்சூர் பொக்காலி பதம், (நெல் வயல்கள்) வைகோம்

பொக்காலி அரிசி (மலையாளம் : പൊക്കാളി) ஒரு தனித்துவம் வாய்ந்த உப்புத்தன்மையை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரிசி வகையாகும். இயற்கை முறையில் எவ்வித ரசாயணமும் இன்றி இப்பயிரானது விளைவிக்கப்படுகிறது.

பயிர் செய்யப்படும் இடம்

தென்னிந்தியாவில் கேரள மாநிலத்தில் ஆலப்புழா, திரிச்சூர், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் 5000 ஹெக்டேர் அளவில் சூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை சாகுபடி செய்யப்படுகிறது.[1] ஏனெனில் இம்மாதங்களில் விளைநிலங்களில் நீரின் உப்புத்தன்மையின் அளவு குறைவாகக் காணப்படும். இப்பயிரானது 130 முதல் 140 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியது. இப்பயிரானது அக்டோபர் மாத இறுதியில் அறுவடை செய்யப்படுகிறது.

தன்மைகள்

இவ்வகை அரிசியானது மிகவும் சுவையாகவும் அதிக புரதச் சத்தையும் கொண்டுள்ளது; பாஸ்மதி அரிசி போல் நீளமாக இருக்கும்.மேலும் மருத்துவ குணமும் வாய்ந்தது.

சான்றுகள்

  1. "Shrimp, fish and paddy cultivation in same field is lucrative". The Hindu. Retrieved 2013-06-13.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya