பொடிடேயா சமர்
பொடிடேயா சமர் (Battle of Potidaea) என்பது கிமு 432 இல் ஏதென்சுக்கும் கொரிந்து மற்றும் பொடிடேயாவைச் சேர்ந்த கூட்டுப் படைக்கும் அவர்களின் பல்வேறு கூட்டாளிகளுக்கு இடையில் நடந்த சமராகும். சைபோட்டா சமருடன், இது பெலோபொன்னேசியப் போருக்கு ஒரு தூண்டுகோலாக ஆனது. பின்னணிபொடிடேயா சால்சிடிஸ் தீபகற்பத்தில் இருந்த கொரிந்துவின் குடியேற்றமாகும். ஆனால் அது டெலியன் கூட்டணியில் உறுப்பினராக இருந்தது மேலும் ஏதென்சுக்கு கப்பம் செலுத்திவந்தது. [1] பொடிடேயாவுக்கு ஆண்டுதோறும் கொரிந்திய அதிகாரிகள் வந்து செல்வார்கள் அவர்களுக்கு விருந்தளிக்கபட்டு வந்தது. [2] சைபோட்டாவில் ஏதெனியர்களுக்கு ஏற்பட்ட தோல்வியால் ஏதென்சு பாதுகாப்பின்மையை உணர்ந்தது. அதனால் பொடிடேயா அதன் மதில் சுவர்களின் ஒரு பகுதியை இடித்து தரைமட்டமாக்கவேண்டும், கொரிந்திய அதிகாரிகளை வெளியேற்றவேண்டும், ஏதென்சுக்கு பிணையாளர்களாக சிலரை ஒப்படைக்க வேண்டும் என்று தாக்கீது அனுப்பியது. [2] கொரிந்தியன் அல்லது மாசிடோனியாவின் தூண்டுதலின் காரணமாக பொடிடேயா கிளர்ச்சி செய்யும் என்று ஏதென்ஸ் அஞ்சியது. ஏனெனில் மாசிடோனியாவின் மன்னரான இரண்டாம் பெர்டிக்காஸ் திரேசு உள்ளிட்ட ஏதென்சின் கூட்டாளிகளை ஏதென்சுக்கு எதிராக கிளர்ச்சி செய்ய தூண்டிவிட்டார். [3] பொடிடேயா ஏதென்சின் கோரிக்கைக்கு இணங்கவில்லை. மேலும் ஏதென்சுக்கு எதிராக கலகத்தைத் துவக்கியது. [2] இந்தக் கலகத்தை அடக்க ஆர்கெஸ்ட்ராடஸ் தலைமையிலான ஒரு படையை ஏதென்ஸ் அனுப்பியது. [4] சமர்ஆர்கெஸ்ட்ராடசின் தலைமையியிலான ஏதெனிய படைக்கு 30 கப்பல்கள் மற்றும் 1,000 ஹாப்லைட்களைக் கொண்ட ஒரு கடற்படை திரட்டப்பட்டது. [5] ஏதெனியப் படை முதலில் மாசிடோனியாவின் பெர்டிக்காசுக்கு எதிராக போரிடுவதாக இருந்தது, ஆனால் பின்னர் அப்படை பொடிடேயாவுக்குத் திருப்பிவிடப்பட்டது. பொடிடியா ஏதென்ஸ் மற்றும் எசுபார்த்தாவிற்கு தன் தூதர்களை அனுப்பியது. அது ஏதென்சிடம் நடத்திய பேச்சுவார்த்தை முறிந்தது. ஆனால் அட்டிகா மீது படையெடுப்பத்து அதன் வழியாக பொடிடேயாவின் கிளர்ச்சிக்கு உதவுவதாக எசுபார்த்தா உறுதியளித்தது. [5] ஏதெனியன் கப்பற்படை பொடிடேயாவுக்குப் பயணம் செய்தது, ஆனால் அது வந்தபோது, பொடிடேயா தனக்கு வடக்கே உள்ள சில அரசுகளும் சேர்ந்து ஒரு கூட்டணியை அமைத்திருந்ததால், அதற்குப் பதிலாக ஆர்கெஸ்ட்ராடஸ் மாசிடோனியர்களைத் தாக்கினார். [6] கொரிந்து 1,600 ஹோப்லைட்டுகளையும் 400 இலகு ரக படைகளையும் அரிஸ்டியசின் தலைமையின் கீழ் பொடிடேயாவிற்கு துணையாக அனுப்பியது. [7] பதிலுக்கு, ஏதென்ஸ் மேலும் 2,000 ஹாப்லைட்களையும், 40 கப்பல்களையும் கல்லியாசின் தலைமையில் அனுப்பியது. [8] பெர்டிக்காசுக்கு எதிராக சில மோதல்களுக்குப் பிறகு, ஒருங்கிணைந்த ஏதெனியப் படைகள் பொடிடேயாவுக்குச் சென்று அங்கு தரையிறங்கியது. பெர்டிகாஸ் மற்றும் அவரது 200 குதிரைப்படைகள் அரிஸ்டியசுடன் இணைந்தது. இந்தக் கூட்டுப் படை பொடிடேயாவுக்கு அணிவகுத்தது. [9] தொடர்ந்து நடந்த போரில், அரிஸ்டியசின் கொரிந்தியப் படைகள் ஏதெனியன் வரிசையின் ஒரு பகுதியை தோற்கடித்தன. ஆனால் மற்ற இடங்களில் ஏதெனியர்கள் வெற்றி பெற்றனர். முக்கிய ஏதெனிய இராணுவத்தைத் தவிர்க்கும் நம்பிக்கையுடன் அரிஸ்டியஸ் சிறிது சிரமத்துடன் கடற்கரையோரமாக பொடிடேயாவுக்குத் திரும்பினார். [9] அருகிலுள்ள ஒலிந்தசில் நிறுத்திவைக்கபட்டிருந்த பொடிடியன்களின் காப்புப் படை அரிஸ்டியசை விடுவிக்க முயன்றது, ஆனால் அவர்களும் தோற்கடிக்கப்பட்டனர். கொரிந்தியர்கள் மற்றும் பொடிடியன்கள் சுமார் 300 பேரையும், ஏதெனியர்கள் கால்லியாஸ் உட்பட 150 பேரையும் இழந்தனர்; மாசிடோனிய குதிரைப்படை போரில் சேரவில்லை. [10] ஏதெனியர்கள் பொடிடேயாவிற்கு வெளியே சிறிது காலம் இருந்தனர், மேலும் போர்மியோவின் தலைமையின் கீழ் 1,600 ஹாப்லைட்டுகளைக் கொண்டு ஏதெனியப்படை வலுப்படுத்தப்பட்டது. இருபுறமும் சுவர்கள் மற்றும் எதிர் சுவர்கள் கட்டப்பட்டன. மேலும் ஏதெனியர்கள் நடத்திய கடற்படை முற்றுகை மூலம் கடலிலின் தொடர்பிலிருந்து பொடிடியாவை துண்டித்து தனிமையாக்குவதில் வெற்றி பெற்றனர். முற்றுகையின் போது, கொரிந்து, ஏதென்ஸ் மற்றும் ஸ்பார்டாவின் பிரதிநிதிகள் ஸ்பார்டாவில் சந்தித்தனர், இதன் விளைவாக முறையான போர் பிரகடனம் செய்யப்பட்டது. [11] இருப்பினும், இந்த முற்றுகை கிமு 430/429 வரை இரு ஆண்டுகள் நீடித்தது. இராணுவ நடவடிக்கைக்காக ஆண்டுக்கு 420 தாலந்துகள் செலவானதால் அது ஏதெனியன் கருவூலத்தைக் கரைத்தது. [12] மேலும் கிமு 420 களின் முற்பகுதியில் ஏதென்சில் பரவிய பிளேக் நோயும் இதனுடன் சேர்ந்தது. அதன் தொடர்ச்சியாக பெரிக்கிள்சின் தொடர்ச்சியான தலைமையை ஏதெனியர்கள் ஏற்றுக்கொள்ள முடியாததாக ஆக்கியது. நீண்ட சுவர்களுக்குப் பின்னால் மறைந்துகொண்டு, பெலோபொன்னேசியர்களின் குறைந்த நிதி சேகரிப்பை நம்பியிருக்கும் பெரிக்லியன் திட்டமானது ஏதெனியன் பேரரசு கனவுக்கு சாதகமற்றதாக மாறத் தொடங்கியது. [13] பிளேட்டோவின் பல உரையாடல்களில், தத்துவஞானி சாக்ரடீஸ் பொடிடேயா போரில் கலந்துகொண்ட ஒரு மூத்த வீரராக சுட்டிக்காட்டுகிறார். அதில் அவர் ஆல்சிபியாடீசின் உயிரைக் காப்பாற்றினார். குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia