பொட்டாசியம் சிடீயரேட்டு
பொட்டாசியம் சிடீயரேட்டு (Potassium stearate) என்பது C18H35KO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு வேதிச் சேர்மம் ஆகும். உலோகக் கரிமச் சேர்மமான இச்சேர்மம் பொட்டாசியமும் சிடீயரிக் அமிலமும் சேர்ந்து வினைபுரிவதால் உருவாகிறது. கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதியாக இருப்பதால் இது ஓர் உலோக சோப்பு என்றும் கருதப்படுகிறது.[1][2] தயாரிப்புஆல்ககாலில் கரைக்கப்பட்ட பொட்டாசுடன் சிடீயரிக் அமிலத்தின் சூடான கரைசலை சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் பொட்டாசியம் சிடீயரேட்டு தயாரிக்கப்படுகிறது.[3] இயற்பியல் பண்புகள்நிறமற்ற படிகங்களாக பொட்டாசியம் சிடீயரேட்டு உருவாகிறது. குளிர்ந்த நீரில் சிறிதளவு கரையும். சூடான நீரிலும் எத்தனால் கரைசலிலும் நன்கு கரையும். ஈதர், குளோரோஃபார்ம், கார்பன் டைசல்பைடு போன்ற கரைப்பான்களில் கரையாது.[4] திரவ சோப்பின் ஒரு கூறாகவும் இது கருதப்படுகிறது. பயன்கள்பொட்டாசியம் சிடீயரேட்டு முதன்மையாக அழகுசாதனப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களில் குழம்பாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது ஒரு சுத்தப்படுத்தும் பொருளாகவும், மசகு எண்ணெய்யாகவும் பயன்படுத்தப்படுகிறது.[5][6] தீங்குகள்தோல் எரிச்சலையும் கடுமையான கண் எரிச்சலையும் ஏற்படுத்தும்.[7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia