பொட்டாசியம் செலீனோசயனேட்டு
பொட்டாசியம் செலீனோசயனேட்டு (Potassium selenocyanate) என்பது KSeCN என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் நீருறிஞ்சும் திண்மமாக பொட்டாசியம் செலீனோசயனேட்டு காணப்படுகிறது. பொட்டாசியம் செலீனோசயனேட்டு தண்ணீரில் கரைகிறது. காற்றில் சிதைவடையும் போது இச்சேர்மம் சிவப்பு செலீனியத்தையும் பொட்டாசியம் சயனைடையும் கொடுக்கிறது. இச்செலீனோசயனேட்டின் நடத்தைகள் எக்சு கதிர் படிகவியல் சோதனைகளில் உறுதிப்படுத்தப்படுகின்றன. இச்சோதனைகளின் இறுதி முடிவுகள் இதை ஓர் உப்பு என்பதாக உறுதிப்படுத்துகின்றன. C-N மற்றும் C-Se அணுக்களுக்கு இடையில் முறையே முரணற்ற முப்பிணைப்பு மற்றும் ஒற்றைப் பிணைப்புகளில் 1.12 மற்றும் 1.83 என்ற அளவுகளில் பிணைப்பு இடைவெளிகள் உள்ளன [1] . Se0 வைக் கொடுக்கின்ற ஆதாரமூலமாக பொட்டாசியம் செலீனோசயனேட்டு கருதப்படுகிறது. உதாரணம்: டிரைபீனைல்பாசுபீனுடன் இது வினைபுரிந்து டிரைபீனைல்பாசுபீன் செலீனைடு உருவாகிறது [2]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia