பொட்டாசியம் டெட்ரா அயோடோமெர்குரேட்டு(II)
பொட்டாசியம் டெட்ரா அயோடோமெர்குரேட்டு(II) (Potassium tetraiodomercurate(II)) என்பது K2[HgI4]. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியம் நேர்மின் அயனிகளும் டெட்ரா அயோடோமெர்குரேட்டு(II) எதிர்மின் அயனிகளும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. அம்மோனியாவைக் கண்டறிவதற்குப் பயன்படுத்தப்படும் நெசுலர் வினையாக்கியில் இச்சேர்மம் ஒரு தீவிர செயல்படும் முகவராகும். தயாரிப்புமெர்குரிக் அயோடைடு, பொட்டாசியம் அயோடைடு மற்றும் அசிட்டோனில் உள்ள 2% தண்ணீரின் சூடான கரைசலில் இருந்து பொட்டாசியம் டெட்ரா அயோடோமெர்குரேட்டு(II) படிகமாகிறது. செறிவூட்டப்பட்ட நீரிய கரைசலில் தயாரிக்க மேற்கொள்ளப்படும் முயற்சியானது வெளிறிய ஆரஞ்சு நிற ஒற்றைநீரேற்றைக் K[Hg(H2O)I3] கொடுக்கும்.[2] பயன்பாடுகள்பொட்டாசியம் டெட்ரா அயோடோமெர்குரேட்டு(II) இதன் ஒப்புமைகளான செப்பு மற்றும் வெள்ளி உப்புகளான M2[HgI4] (இங்கு M=Cu,Ag)போன்றவற்றை தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாகப் பயனளிக்கிறது. [3] நெசுலர் வினையாக்கிஇயூலியசு நெசுலரின் (நெசுலர்) பெயரிடப்பட்ட நெசுலர் வினையாக்கியானது 2.5 மோல்/லி பொட்டாசியம் ஐதராக்சைடில் உள்ள பொட்டாசியம் டெட்ரா அயோடோமெர்குரேட்டின்(II) 0.09 மோல்/லி கரைசல் ஆகும். அம்மோனியா (NH3) முன்னிலையில் இந்த வெளிர் கரைசல் ஆழமான மஞ்சள் நிறமாக மாறும். அதிக செறிவுகளில், மில்லனின் காரத்தில் (HgO·Hg(NH2)Cl) ஒரு பழுப்பு நிற படிவு வழிப்பெறுதி உருவாகும். இதன் உடனடி பரிசோதனை உணர்திறன் மதிப்பு 2 μL இல் 0.3 μg NH3 ஆகும்.
பழுப்பு நிற வீழ்படிவு முழுமையாக வகைப்படுத்தப்படவில்லை. இது HgO·Hg(NH2)I சேர்மத்திலிருந்து 3HgO·Hg(NH3)2I2 வரை மாறுபடலாம். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia