பொட்டாசியம் பெர்ரியாக்சலேட்டு
பொட்டாசியம் பெர்ரியாக்சலேட்டு (Potassium ferrioxalate) என்பது K3[Fe(C2O4)3] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். இது பெரும்பாலும் ஒரு டிரை ஐதரேட்டு எனப்படும் முந்நீரேற்று K3[Fe(C2O4)3] • 3H2O வடிவத்திலேயே தோன்றுகிறது. இவ்விரண்டுமே படிகச் சேர்மங்களாகும். எலுமிச்சை பச்சை நிறத்தில் இவை காணப்படுகின்றன[2]. பொட்டாசியம் டிரிசு ஆக்சலேட்டோபெர்ரேட்டு அல்லது பொட்டாசியம் டிரிசு(ஆக்சலேட்டோ)பெர்ரேட்டு(III) என்ற பெயர்களாலும் இவை அழைக்கப்படுகின்றன[2]. பொட்டசியம் K+ நேர்மின் அயனியும் பெர்ரி ஆக்சலேட்டு [Fe(C2O4)3]3−எதிர்மின் அயனியும் சேர்ந்து இச்சேர்மத்தை உருவாக்குகின்றன. எதிர்மின் அயனி இரும்பு +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலும் இந்தணைவிகளாகச் செயல்படும் மூன்று இருபல் ஆக்சலேட்டு அயனிகளும் கொண்ட ஓர் இடைநிலை உலோக அணைவுச் சேர்மமாகும். பொட்டாசியம் எதிர் அயனியாகச் செயல்பட்டு அனைவுச் சேர்மத்தின் -3 மின்சுமையை சமப்படுத்தி பராமரிக்கிறது. கரைசலில் உப்பானது பிரிகையடைந்து பெர்ரியாக்சலேட்டு ([Fe(C2O4)3]3−) எதிர்மின் அயனியை தருகிறது. இது ஒளிரும் பச்சை நிறத்தில் தோற்றமளிக்கிறது. பெர்ரியாக்சலேட்டு எதிர்மின் அயனி இருளில் நிலைத்து நிற்கிறது. ஆனால் ஒளியில், உயர் ஆற்றல் மின்காந்த கதிரியக்கத்தில் இது சிதைவடைகிறது. ஒளியியல் பாய்மத்தை அளவிடும் வேதியியல் கதிர் செறிவு அளவியலில் இப்பண்பு பயன்படுகிறது. கட்டிட அமைப்பின் நிழற்பட அச்சுமுறை தயாரிப்பிலும் இது பயன்படுகிறது. தயாரிப்புஇரும்பு(III) சல்பேட்டுடன் பேரியம் ஆக்சலேட்டையும் பொட்டாசியம் ஆக்சலேட்டையும் சேர்த்து வினைபுரியச் செய்து இந்த அணைவுச் சேர்மம் தயாரிக்கப்படுகிறது:[3]
வினைபடு பொருள்கள் நீரால் இணைக்கப்படுகின்றன. BaSO
கட்டமைப்புமுந்நீரேற்று மற்றும் நீரிலி உப்பின் கட்டமைப்புகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. Fe(III) அதிக சுழற்சியில் உள்ளதென இவை தெரிவிக்கின்றன. ஏனெனில் குறைந்த சுழற்சி அனைவுச்சேர்மங்கள் யான் – டெல்லர் உருக்குலைவை வெளிப்படுத்தும். அமோனியமும் கலப்பு சோடியம் பொட்டாசியம் உப்புகளும் Al3+, Cr3+, மற்றும் V3+ அயனிகளுடன் சமவுருவில் காணப்படுகின்றன. பெர்ரியாக்சலேட்டு திருகுச்சுழல் சமச்சீரின்மையை காட்டுகிறது, ஏனெனில் இது இரண்டு மிகைப்படுத்த முடியாத வடிவவியல்களை உருவாக்க முடியும். ஐயுபிஏசி இன் முடிவுக்கு இணங்க, இடது கை திருகு அச்சுடன் கூடிய மாற்றியனுக்கு கிரேக்க சின்னம் Λ (லாம்டா) ஒதுக்கப்படுகிறது. வலது கை திருகு அச்சுடன் அதன் கண்ணாடி படத்திற்கு கிரேக்க சின்னம் Δ (டெல்டா) கொடுக்கப்பட்டுள்ளது [5] ![]() . வினைகள்ஒளியொடுக்கம்பெர்ரியாக்சலேட்டு அயனி ஒளி மற்றும் எக்சு-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் உள்ளிட்ட உயர் ஆற்றல் மின்காந்த கதிர்வீச்சுக்கு உணர்திறன் கொண்டுள்ளது. ஒரு போட்டான் உறிஞ்சப்படுவதால் ஓர் ஆக்சலேட்டு கார்பன் டை ஆக்சைடாக சிதைவும் இரும்பு (III) அணுவை இரும்பு (II) ஆக ஒடுக்கமும் அடைகின்றன [6]. வெப்பச்சிதைவுமுந்நீரேற்று 113 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு வெப்பமடையும் போது ஒரே நேரத்தில் மூன்று நீர் மூலக்கூறுகளை இழக்கிறது [1]. 296 பாகை செல்சியசு வெப்பநிலையில் நீரிலி உப்பு இரும்பு(II) அணைவு பொட்டாசியம் பெர்ரோ ஆக்சலேட்டு, பொட்டாசியம் ஆக்சலேட் மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகியவையாக சிதைகிறது: :[1]
இந்த ஒளி வினையூக்கிய ஆக்சிசனேற்ற ஒடுக்க வினை சில புகைப்பட செயல்முறைகளின் அடிப்படையை உருவாக்கியது. இருப்பினும் அவற்றின் உணர்வின்மை மற்றும் எண்ணிம புகைப்படம் எடுத்தல் நுட்பம் காரணமாக இந்த செயல்முறைகள் வழக்கற்றுப் போய்விட்டன, அனைத்தும் மறக்கப்பட்டும் விட்டன பயன்கள்பெர்ரியாக்சலேட்டு எதிர்மின் அயனியின் திறமையான ஒளியாற்பகுப்பு கண்டுபிடிப்பு இரசாயன ஒளி வேதியியல் மற்றும் கதிர்செறிவு அளவியலுக்கு ஒரு அடையாளத்தை தந்தது. இந்த நோக்கங்களுக்காக முன்னர் பயன்படுத்தப்பட்ட சேர்மம் யுரேனைல் ஆக்சலேட்டை விட பொட்டாசியம் உப்பு 1000 மடங்கு அதிக உணர்திறன் கொண்டதாக கண்டறியப்பட்டது [6][7]. பொட்டாசியம் பெர்ரியாக்சலேட்டின் தொகுப்பு மற்றும் வெப்ப சிதைவு என்பது உயர்நிலைப் பள்ளி, கல்லூரி அல்லது இளங்கலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஒரு பிரபலமான பயிற்சியாகும், ஏனெனில் இது இடைநிலை உலோக அணைவுச் சேர்மங்களின் வேதியியல், பார்வைக்கு கவனிக்கக்கூடியதாகவும் ஒளி வேதியியல் மற்றும் வெப்ப எடையளவியல் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும் [8]. பரந்த நவீன அச்சுப்பொறிகள் கிடைப்பதற்கு முன்பு, பெரிய அளவிலான பொறியியல் வரைபடங்கள் பொதுவாக புகைப்பட அச்சு செயல் முறையால் உருவாக்கப்பட்டன. இந்த புகைப்பட அச்சுச் செயல்முறையில் பயன்படுத்தப்படும் அணைவுச் சேர்மம் முக்கியமாக அம்மோனியம் இரும்பு(III) சிட்ரேட்டு ஆகும், ஆனால் பொட்டாசியம் பெர்ரியாக்சலேட்டும் கூட பயன்படுத்தப்படுகிறது [9][10]. மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia