பொன்னேர் உழுதல்![]() பொன்னேர் உழுதல் (Royal Ploughing Ceremony) என்பது பருவகாலம் பார்த்து முதன் முதலாக ஏர்பிடித்து செய்யும் உழவு முறையாகும்.[1] இது சங்ககாலம் தொட்டே தமிழகத்தில் இருந்துவருவதை அகநானூற்று பாடல்கள் வாயிலாக அறியலாம்.[2] இதை இளங்கோவடிகள் ஏர்மங்கலம் எனக் குறிப்பிடுகிறார்.[3] முதன் முதலாக ஒரு நிலப்பகுதியில் நல்ல நாளில் ஏர் பூட்டி உழத் தொடங்குவதைப் பொன்னேர் பூட்டல் என்பர். கொங்கதேச வேளிர் தலைவர்களாலும், தாய்லாந்து, கம்போடிய, இலங்கை , பர்மிய மன்னர்களாலும் இன்றளவும் நடத்தப்பெருகிறது.[4] தற்காலத்தில் தமிழ்நாட்டின் கிராமங்களில் இந்த விழாவானது சித்திரை மாதத்தில் நடத்தப்படுகிறது. இந்த நாளில் கிராமத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் மாடுகளை ஏரில் பூட்டி ஊர் பொது இடத்தில் வரிசையாக அணிவகுத்து உழுது பூசைசெய்து வழிபடும் வழக்கம் உள்ளது. இன்கா நாகரிகம்இன்கா வேளாண்மை முறையிலும் மன்னரே புதிய விவசாய நிலங்களை முதலாவதாக உழுது தொடங்கி வைப்பார். அங்கேயும் அவர் பொன்னாலான கலப்பையையேப் பயன்படுத்துவார்.[5] மகதம்பண்டை மகதநாட்டு ஊர்களில் ஆண்டுதோறும் முதலுழவு உழும்போது, ஊர்த்தலைவன் பொன்னாற் செய்த ஏரைப் பூட்டி உழவர் வரிசையில் முதலில் நின்று, பிறர் பின்வர, ஒரு படைச்சாலோட்டித் தொடங்கிவைப்பான் என்று சொல்லப்படுகிறது.[6] மேலும் பார்க்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia