பொருளியலுக்கான நோபல் பரிசு (Nobel Prize in Economics) என்று பரவலாக அறியப்படும் பொருளியலுக்கான நோபல் நினைவு பரிசு (Nobel Memorial Prize in Economic Sciences)[1]பொருளியலில் சீர்மிகு பங்களிப்புகளை நல்கியோருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஓர் உலகளவிலான விருதாகும்.[2] இத்துறையில் வழங்கப்படும் மதிப்புமிக்க விருதுகளில் இது ஒன்றாக பொதுவாகக் கருதப்படுகிறது. [3] இதன் அலுவல் முறையிலான பெயர் சுவிரிஜெஸ் வங்கியின் பொருளியலுக்கான நோபல் நினைவு பரிசு (Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobe) (சுவீடிய: Sveriges riksbanks pris i ekonomisk vetenskap till Alfred Nobels minne).
இது 1895 ஆம் ஆண்டு நோபலின் உயிலின்படி நிறுவப்பட்ட நோபல் பரிசு அல்ல. இருப்பினும் பொதுவாக அவற்றுடனேயே அடையாளப்படுத்தப்படுகிறது. [3][4][5][6][7]பொருளியல் பரிசு என்று நோபல் நிறுவனத்தால் குறிப்பிடப்படும் இது 1968ஆம் ஆண்டில் சுவீடனின் நடுவண் வங்கியான சுவரஜஸ் ரிக்ஸ்பாங்க்கின் 300ஆம் ஆண்டு கொண்டாட்டங்களின் போது நோபலின் நினைவாக அந்த வங்கியின் நிதிக்கொடை கொண்டு நிறுவப்பட்டதாகும். [3][8][9][10]இயற்பியல், வேதியியல் போன்றே இந்தப் பரிசினைப் பெறுவோரையும் சுவீடனின் அறிவியலுக்கான அரச அகாதெமி தேர்ந்தெடுக்கிறது. [11][12]
1969ஆம் ஆண்டு முதன்முதலாக இந்தப் பரிசு டச்சு மற்றும் நோர்வீஜிய பொருளியலாளர்கள் யான் டின்பெர்கன் மற்றும் ராக்னர் பிரிஷ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.[[10][13][14]
மேற்கோள்கள்
↑Hird., John A. (2005). Power, Knowledge, and Politics. American governance and public policy. Georgetown University Press. p. 33. ISBN9781589010482. கணினி நூலகம்231997210. the Bank of Sweden Prize in Economic Sciences in Memory of Alfred Nobel, commonly referred to as the Nobel Prize in Economics, was awarded to economists beginning in 1969.
↑ 3.03.13.2"Nobel Prize". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். 2007. Retrieved 2007-11-14. An additional award, the Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of ஆல்பிரட் நோபல், was established in 1968 by the Bank of Sweden and was first awarded in 1969. Although not technically a Nobel Prize, it is identified with the award. Thus, its winners are announced with the Nobel Prize recipients, and the Prize in Economic Sciences is presented at the Nobel Prize Award Ceremony.
↑Nasar, A Beautiful Mind, p. 358, "It is, in fact, not a Nobel Prize, but rather 'The Central Bank of Sweden [Sveriges Riksbank] Prize in Economic Science[s] in Memory of Alfred Nobel.'"
↑"The Nobel Prize". The Nobel Foundation. Retrieved 2007-11-07. In 1968, Sveriges Riksbank established The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel, founder of the Nobel Prize.