பொருளியல் நடத்தை


பொருளியல் நடத்தை யாதெனில், தன் வீட்டு அல்லது நாட்டின், பண, பொருள் மற்றும் நிர்வாகச்சூழலை அறிந்து செயல் புரிதல் ஆகும். இது தனி மனிதரையோ அல்லது பொதுவாக ஒரு குழு, சமூகம் மற்றும் ஒரு நாட்டின் செயல்பாட்டை குறிப்பது ஆகும்.

பொருளியல் நடத்தை, பொருளியல் மட்டும் அல்லாது மனித மன நிலையையும் குறிக்கும் வார்த்தை ஆகும். ஒரு இல்லம், தேசம் அல்லது இரண்டும் சேர்ந்து ஒரு தனி பட்ட நபரை அல்லது ஒரு சமூகத்தின் மனப்பான்மையை பொருளாதாரச்சூழல் எவ்வாறு தாக்குகிறது, அந்தத்தாக்கத்தினால், மேற்கூறியவர்களின் நடத்தைகளை கண்காணித்து ஒரு தீர்மானத்திற்கு வருவதே இச்சொல்லின் அர்த்தம் ஆகும்.

பொருளியல் நடத்தை மனிதர்களின் வருமானம், செலவு, கடன் கொடுத்தால் மற்றும் வாங்குதல், வரி செலுத்துதல் போன்ற விஷயங்களின் கவனிப்பு ஆகும். பொருளியல் நடத்தை நபருக்கு நபர், மற்றும் தேசத்துக்கு தேசம் வேறுபடும். ஒரு நாட்டின் பண மதிப்பு, பொருளாதார வளர்ச்சி, கல்வி நிலை, வேளாண்மை வளர்ச்சி, அரசியல் நடப்புகள், விவசாய நடப்புகள் போன்றவற்றை கொண்டு காணலாம். அவ்வாறு கண்டறிவதோடு, ஒன்றோடு ஒன்று ஒப்பிடுதல் செய்யலாம்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya