பொள்ளாச்சி பாலியல் வழக்கு![]() பொள்ளாச்சி பாலியல் வழக்கு என்பது கோயம்புத்தூர் மாவட்ட பொள்ளாச்சியில் பல இளம் பெண்களைக் கடத்திக் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்த குழுவின் மீது 2019 ஆம் ஆண்டு போடப்பட்ட வழக்காகும். இக்குழுவினர் பல பெண்களை வலுக்காட்டாயமாகக் கடத்தி வந்து கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்து, அதனைப் படபிடித்து, பாதிக்கப்பட்டவர்களிடம் பணமோ பாலியல் இசைவோ கேட்டு மிரட்டி வந்துள்ளனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் கசிந்ததாகவும், அரசியல் அழுத்தம் இருந்ததாகவும் அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்தனர்.[1] வழக்குஇவர்களால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணொருவர் தனது சகோதரரிடம் தெரிக்க, அவரும் பாலியல் சீண்டல் செய்த இளைஞர்களைப் பிடித்து விசாரித்திருக்கிறார். அப்போது அந்த இளைஞர்களின் கைப்பேசியில் பல இளம்பெண்களின் பாலியல் வன்கொடுமை நிகழும் காணொளிகள் இருந்துள்ளன. இதையடுத்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2019 பிப்ரவரி 24 ஆம் நாள் முதல் தகவலறிக்கை பதிவானது.[2] தொடக்கத்தில் திருநாவுக்கரசு, சபரிராஜன் என்கிற ரிஷ்வந்த், சதீஷ், வசந்தகுமார் ஆகிய நான்கு நபர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. 2019, மார்ச் 12 ஆம் நாள் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு ஏப்ரலில் விசாரணை தொடங்கியது. அழிக்கப்பட்ட மின்னணு ஆவணங்கள், புகார்களின் அடிப்படையில் மணிவண்ணன், ஹேரேன் பால், பாபு என்ற பைக் பாபு, அருளானந்தம், அருளானந்தம், அருண்குமார் ஆகியோருடன் மொத்தம் 9 நபர்கள் மீது பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், ஆள்கடத்தல், அடைத்து வைத்து துன்புறுத்துதல், கூட்டுச்சதி, தடயங்கள் அழிப்பு, ஆபாச வீடியோ எடுத்தல், ஆபாசக் காணொளிகளைப் பகிர்தல் ஆகிய 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.[3] கைதான ஒன்பது நபர்களும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பெண்கள் அடித்துத் துன்புறுத்தப்படும் காணொளிகள், சமூகத்தளங்களில் பரவி, பேசுபொருளனது. கைது செய்யப்பட்ட அருளானந்தம் என்பவர் அதிமுக மாணவர் அணிச் செயலாளர் பொறுப்பிருந்தும் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார்.[4][5] தீர்ப்புகுற்றம்சாட்டப்பட்ட ஒன்பது நபர்களும் குற்றவாளிகள் என்றும் ஆயுள் தண்டனை விதித்தும் 2025 மே 13 ஆம் நாள் இந்த வழக்கின் தீர்ப்பு வந்தது.[6] சபரி ராஜனுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம், 4 ஆயுள் தண்டனையும் திருநாவுக்கரசுக்கு ரூ.30,500 அபராதம், 5 ஆயுள் தண்டனையும் சதீஷூக்கு ரூ.18,500 அபராதம், 3 ஆயுள் தண்டனையும் வசந்தகுமாருக்கு ரூ.13,500 அபராதம், 2 ஆயுள் தண்டனையும் மணிவண்ணனுக்கு ரூ.18 ஆயிரம் அபராதம், 5 ஆயுள் தண்டனையும் பாபுவுக்கு ரூ.10,500 அபராதம், ஒரு ஆயுள் தண்டனையும் ஹேரன்பாலுக்கு ரூ.14 ஆயிரம் அபராதம், 3 ஆயுள் தண்டனையும் அருளானந்தத்துக்கு ரூ.5500 அபராதம், ஒரு ஆயுள் தண்டனையும் அருண்குமாருக்கு ரூ.5500 அபராதம், ஒரு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டன.[7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia