போன மச்சான் திரும்பி வந்தான்
போன மச்சான் திரும்பி வந்தான் (Pona Machaan Thirumbi Vandhan) 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. எஸ். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீராம், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] துமிலன் எழுதிய புனர்ஜென்மம் என்ற கதையை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது. வணிக அளவில் இது வெற்றி பெறவில்லை.[2] திரைக்கதைசாம்பு (தங்கவேலு) என்ற பணக்கார இளைஞன் வேலை வெட்டிக்குச் செல்லாமல் சாப்பிடுவதும், புகையிலை, வெற்றிலை பாக்குடன் வம்புகளிலும் நேரத்தைக் கழிக்கிறான். அவனுடைய தங்கை சந்திராவுக்கு (டி. டி. குசலகுமாரி) திருமணம் செய்ய நினைத்து சாம்பு பத்திரிகையில் விளம்பரம் செய்கிறான். ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பினால் சம்பந்தம் பேசலாம் என்ற நிபந்தனையின் பேரில், வட இந்தியாவில் பணியாற்றும் தியாகு (ஸ்ரீராம்) திருமணம் முடிவு செய்ய சென்னை வருகிறான். டி. கே. இராமச்சந்திரனும் அவன் தங்கை விமலாவுடன் (லட்சுமிகாந்தம்) சம்பந்தம் பேச சாம்புவின் வீட்டுக்கு வருகிறான். ஆனால் விளம்பரம் மூலம் கல்யாணம் பேசுவதை விரும்பாத சந்திரா வீட்டை விட்டு வெளியேறுகிறாள். அப்போது சிறீராமை சந்திக்கிறாள் சந்திரா. இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இருவரும் ஒரு கார் விபத்தில் சிக்குகிறார்கள், வாகன சொந்தக்காரர் இருவரையும் கணவன் மனைவி என்று நினைத்து சிகிச்சை செய்ய தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். சந்திராவும் தியாகுவும் எப்படி மீண்டும் வீட்டுக்குத் திரும்பி சாம்புவின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பது மீதிக் கதை. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia