போலி

போலி என்பது ஓர் எழுத்து நிற்க வேண்டிய இடத்தில் வேறோர் எழுத்து நின்று அதைப் போலப் பொருள் தரும் சொல் ஆகும். சொற்களில் எழுத்துகள் நிற்கும் இடங்களைப் பொருத்து, முதல் போலி, இடைப்போலி, மொழி இறுதிப் போலி அல்லது கடைப்போலி என்று எழுத்துப் போலியை நன்னூல் மூன்று வகைகளாகப் பிரிக்கிறது.

முதற்போலி

சொல்லுக்கு முதலிலும் நடுவிலும் , , என்னும் எழுத்துகளுக்கு முன் வரும் அகரத்துக்குப் பதிலாக ஐகாரம் போலியாக வந்து பொருள் தரும்.[1]

எடுத்துக்காட்டுகள்:-

மஞ்சு - மைஞ்சு, மயல் - மையல், பசல் - பைசல் முதலிய சொற்களில் மொழிக்கு முதலில் ச, ஞ, ய என்னும் எழுத்துகளுக்கு முன் அகரத்திற்குப் போலியாக ஐகாரம் வந்து நிற்கிறது. இது முதற் போலி ஆகும்.

அமச்சு - அமைச்சு, அரயர் - அரையர் முதலிய சொற்களில் மொழிக்கு இடையில் உள்ள ச, ஞ, ய என்னும் எழுத்துகளுக்கு முன் அகரத்திற்குப் போலியாக ஐகாரம் வந்து நிற்கிறது. இஃது இடைப் போலி ஆகும்.

இடைப்போலி

மொழியிடையில் சில இடங்களில் ஐகாரத்தை அடுத்தும் யகர மெய்யை அடுத்தும் நிற்கும் நகர மெய்க்குப் பதில் ஞகரமெய் எழுத்துப்போலியாக நின்று பொருள் தரும்.[2]

எடுத்துக்காட்டுகள்:-

ஐந்நூறு - ஐஞ்ஞூறு, மைந்நின்ற - மைஞ்ஞின்ற (மை போல் இருக்கின்ற)0முதலிய சொற்களில் ஐகாரத்திற்குப் பின் மொழிக்கு இடையில் வந்த நகரத்திற்கு ஞகரம் போலியாக வந்து பொருள் தருகிறது.

செய்ந்நின்ற - செய்ஞ்ஞின்ற , சேய்நலூர் - சேய்ஞலூர் முதலிய சொற்களில் மொழிக்கு இடையில் உள்ள நகரத்திற்குப் பின் ஞகரம் நின்று போலியாக வருகிறது.

இறுதிப்போலி

அஃறிணைப் பெயர்களின் இறுதியில் ஈற்றில் நிற்கும் மகரமெய்க்குப் பதிலாக னகரமெய் போலியாக வந்து நின்று பொருள் தரும்.[3]

எடுத்துக்காட்டு:- அகம் - அகன், கலம் - கலன் முதலிய சொற்களில் மொழிக்கு இறுதியில் மகரத்துக்குப் பதிலாக னகரம் போலியாக வந்து பொருள் தருகிறது.

மேலும் பார்க்க

அடிக்குறிப்புகள்

  1. அ ஐ முதலிடை ஒக்கும் சஞயமுன் - நன்னூல் 123
  2. ஐகான் யவ்வழி நவ்வொடு சில்வழி
    ஞ்ஃகான் உறமும் என்மரும் உள்ரே> - நன்னூல் - 124
  3. மகர இறுதி அஃறிணைப் பெயரின்
    னகரமோடு உறழா நடப்பன உளவே - நன்னூல் 122

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya