போல் கொலிங்வுட்
பால் டேவிட் கோலிங்வுட் MBE (Paul David Collingwood பிறப்பு 26 மே 1976) ஒரு முன்னாள் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார்.இவர் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய துடுப்பாட்ட வடிவங்களில் விளையாடியுள்ளார். கோலிங்வுட் டர்ஹாம் கவுண்டி துடுப்பாட்ட சங்கத்திற்காக விளையாடினார் மற்றும் 2010 ஐசிசி உலக இருபதுக்கு 20 வென்ற இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் தலைவராக இருந்தார். அவர் இங்கிலாந்து தேர்வுத் துடுப்பாட்ட அணியின் பன்முக வீரராகவும், ஒருநாள் சர்வதேச (ஒருநாள்) அணியின் (2007-2008) தலைவராகவும் இருந்தார். அவர் இங்கிலாந்துக்கான முதல் இ20 போட்டியின் தலைவராக இருந்தார்.. தனது துடுப்பாட்ட வாழ்க்கையின் இறுதிகாலங்களில் இவர் டர்ஹாம் கவுண்டி துடுப்பாட்ட சங்கத்தின் தலைவராக இருந்தார்.[1] இவரது காலத்தின் மிகச்சிறந்த களத்தடுப்பு வீரர்களில் ஒருவராகவும் கருதப்பட்டார். இவர் இங்கிலாந்துக்கு இழப்புக் கவனிப்பாளராக விளையாடினார்.[1][2][3][4] 1996 ஆம் ஆண்டில் தனது முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 2001 ஆம் ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 2003 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்ப்பாட்டப் போட்டிகளிலும் இவர் அறிமுகமானார்.[5][6][7] இரண்டு ஆண்டுகள் இவர் சில தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் மட்டுமே விளையாடினார். பின்னர் 2005 ஆம் ஆண்டிற்கான ஆஷஸ் துடுப்பாட்டத் தொடருக்குப் பிறகு தான் இவருக்கு இங்கிலாந்து அணியில் நிலையான இடம் கிடைத்தது. 2006 ஆம் ஆண்டிற்கான ஆஷஸ் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் 206 ஓட்டங்கள் எடுத்தார். ஆத்திரேலிய மண்ணில் 78 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் இருநூறு ஓட்டங்கள் எடுத்த இங்கிலாந்து வீரர் எனும் சாதனை படைத்தார். ஆனால் இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி தோற்றது. ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக போட்டிகளுக்குத் தலைமை தாங்கியவர் எனும் சாதனை படைத்திருந்தார். பின்னர் இயன் பெல் இந்தச் சாதனையினை முறியடித்தார்.[8][9] 2010–11 ஆஷஸ் தொடரின் 5 வது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் போது, ஜனவரி 2011 இல் தேர்வுத் துடுப்பாட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[10] ஆஸ்திரேலியாவில் 24 ஆண்டுகளில் முதல் முறையாக இங்கிலாந்து ஒரு தொடரை வென்று சாதனை படைத்தது. இதில் மூன்று போட்டிகளிலும் ஆட்டப் பகுதியோடு வெற்றிகளைப் பெற்றிருந்தது. கோலிங்வுட் செப்டம்பர் 2018 இல் முதல் தரத் துடுப்பாட்டம் மற்றும் பட்டியல் அ துடுப்பாட்டங்களில் இருந்தும் ஓய்வு பெற்றார்.[11] ஆரம்பகால வாழ்க்கைகோலிங்வுட், கவுண்டி டர்ஹாமின் கான்செட்டுக்கு அருகிலுள்ள ஷாட்லி பிரிட்ஜில் பிறந்தார், இவரது பெற்றோர் டேவிட் மற்றும் ஜேனட் ஆவார்.[12][13] அவரது அண்ணன் பீட்டருடன் சேர்ந்து, பிளாக்ஃபைன் காம்பிரிஹென்சிவ் பள்ளியில் கல்வி பயின்றார், இப்போது கான்செட் அகாடமி என்று அழைக்கப்படுகிறது.[1] தனது ஒன்பதாம் வயதில் இவர் பள்ளி அணியின் தலைவராக இருந்தார்.[14][15] துடுப்பாட்ட வாழ்க்கைஇவர் 2003 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்ப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். இவர் மொத்தமாக 4,259 ஓட்டங்களை எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 2006 ஆம் ஆண்டிற்கான ஆஷஸ் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் 206 ஓட்டங்கள் எடுத்தார். ஆத்திரேலிய மண்ணில் 78 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் இருநூறு ஓட்டங்கள் எடுத்த இங்கிலாந்து வீரர் எனும் சாதனை படைத்தார். குறிப்புகள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia