மகரக்குறுக்கம்"ம்" என்னும் எழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது மகரக் குறுக்கம் எனப்படும். மகரம் + குறுக்கம் = மகரக்குறுக்கம் தனிமொழியில் மெய்யெழுத்துகளில் ன், ண் ஆகிய 2 இரண்டு மெய்யெழுத்துகளையும் அடுத்து வரும் மகர ஒற்றும் (ம்), புணர் மொழியில் மகர மெய்யை அடுத்துவரும் வகர ஒற்றும் (வ்) வரும் இடங்களிலும், மகர ஒற்று தன் மாத்திரையிலிருந்து குறைந்து ஒலிக்கும். இதுவே மகரக் குறுக்கம் எனப்படுகிறது. இதற்கான பண்டைய உரையாசிரியர்களின் எடுத்துக்காட்டு தனிமொழி
புணர்மொழி
மகரக் குறுக்கத்திற்கு உடன்படும் ம் என்ற ஒலிக்குரிய மாத்திரை அளவு கால்.
இலக்கண நூல் விளக்கம்ண ன முன் உம் வஃகான் மிசை உம் ம குறுகும் என்னும் நன்னூல் 97-ஆம் நூற்பாவுக்கு உரையாசிரியர்கள்
என்னும் எடுத்துக்காட்டுகின்றனர். மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் நிலைமொழியீற்றில் மகரமும் வருமொழி முதலில் வகரமும் உள்ளன. இது போல நிலைமொழியீற்றில் மகரம் இருந்து வகர முதல் மொழியோடு புணரும் போது நிலைமொழியீற்றிலுள்ள மகரம் கால் மாத்திரையளவே ஒலிக்கும். இஃது ஒரு வகை மகரக்குறுக்கம். செய்யுள் இறுதிப் போலி மொழிவயின் எடுத்துக்காட்டு
உசாத்துணை
இவற்றையும் பார்க்கவும்அடிக்குறிப்பு |
Portal di Ensiklopedia Dunia