மகரந்தத்தூளியல்![]() மகரந்தத்தூளியல் (Palynology) என்பது நுண்நோக்கியால் மகரந்தத்தை அவதானிப்பது குறித்த அறிவியல் ஆராய்ச்சிப் படிப்பாகும்.[1] இந்த அறிவியல் படிப்பானது நிகழ்கால மற்றும் கடந்தகால மகரந்தத் தூள்களைப் பற்றியது. மகரந்தத்தூளியல் ஒரு பல்துறை சார்ந்த படிப்பாகும். இது புவியியல் மற்றும் உயிரியல் துறைகளில் ஓர் அங்கமாய் விளங்குகிறது. குறிப்பாக தாவரவியல் மற்றும் புவியியலில் பழங்கால சூழ்நிலைகளை அறிந்துகொள்ள இது பெரிதும் உதவுகிறது. மகரந்தத்தூளியலின் வரலாறுமுந்தைய வரலாறுஆங்கில தாவரவியலாளர் நெகேமியா க்ருவ் (Nehemiah Grew) 1640களில் நுண்நோக்கியின் வழியே மகரந்தத்தூளைப் பார்த்திருப்பதாக குறிப்புகள் கூறுகின்றன.[2] அவர் தாவரங்களின் இனப்பெருக்கத்திற்கு மகரந்தத்தூள் மிக இன்றியமையாதது என்று சொன்னதோடல்லாமல் மகரந்தம், மகரந்ததாள் போன்றவற்றைப் பற்றியும் முதன் முதலில் விளக்கினார். நுண்நோக்கியின் வளர்ச்சி மற்றும் ராபர்ட் கிட்ச்டன் (Robert Kidston) மற்றும் (பி. ரேயன்ச்ச்) போன்றவர்களின் ஆராய்ச்சி, நிலக்கரியில் ஸ்போர்களின் கண்டுபிடிப்பு இந்தத் துறையை மேலும் சிறப்பானதாக்கியது.[3] அண்மைக்கால மகரந்தத்தூளியல்1916ல் லென்னர்ட் வான் போஸ்ட் (Lennart von Post) க்ரிச்தியானியாவில் (Kristiania) நிகழ்த்திய சொற்பொழிவில் மகரந்தத்தூளியல் துறையின் மற்றுமொரு பரிமாணத்திற்கு இட்டுச் சென்றார்.[4] மகரந்த ஆராய்ச்சி முதலில் வட ஐரோப்பா நாடுகளில் தான் அவர்கள் மொழியிலேயே காணப்பட்டது.[5] இந்த நிலை 1921ல் குன்நேர் எர்ட்மன் (Gunner Erdtman) தன்னுடைய ஆய்வேட்டை வெளியிட்டதன் மூலம் மாறியது. இந்தக் கால கட்டங்களில் மகரந்த ஆராய்ச்சி ஐரோப்பா முழுவதும் மற்றும் வட அமெரிக்கப் பகுதிகளிலும் தட்பவெப்ப நிலை மாற்றத்தைப் புரிந்துகொள்ள உதவியாக இருந்தது.[4] மகரந்தத்தூளியல் (Palynology) என்ற பதத்தை முதலில் ஹைடு (Hyde) மற்றும் வில்லியம்ஸ் (Williams) 1944ல் ஸ்வீடிஷ் புவியியலாளர் அன்டேவ்ஸ் (Antevs) என்பவருக்கு போல்லன் அனாலிசிஸ் சிர்கிளர் (Pollen Analysis Circular) என்ற நூலில் எழுதிய கடிதத்தில் புகுத்தினர். ஹைடு (Hyde) மற்றும் வில்லியம்ஸ் (Williams) இந்தப் பதத்தை கிரேக்க பதமான paluno (தெளிப்பது என்று பொருள்படும்) மற்றும் pale (தூசி என்று பொருள்படும்) என்கின்ற மகர்ந்ததிற்கு இணையான லத்தின் பதத்தில் இருந்து தேர்ந்தெடுத்தனர்.[6] படிக்கும் முறைகள்மகரந்தங்கள் (Palynomorphs) என்பது 5 முதல் 500 மைக்ரோமீட்டர் அளவுக்குட்பட்ட கரிம(organic) சுவற்றை கொண்ட நுண்படிமங்கள் ஆகும். இவை பாறைகளிலும் படிவுப் படிமங்களிலும் இருந்து வேதியியல் மற்றும் இயற்பியல் முறைகளில் பிரித்து எடுக்கப்படுகிறது. வேதியியல் முறைவேதியியல் செரிமாணம் பல நிலைகளை கொண்டது.[7]. முதலில், அறிவியலாளர்கள் பொட்டாசியம் ஐதரொக்சைட்டைப் பயன்படுத்தி தாவர மக்குப் பொருட்களை நீக்கினர். மகரந்தத்தின் சுவர் மீயொலி சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்டாலும், இதை பயன்படுத்துவதன் மூலம் மிகவும் நுண்ணிய துகள்களை பரவல் படுத்த முடியும்.[5] 1924 ல் அசர்சொன் மற்றும் கிரானுலாந்து (Assarson and Granuland) ஆகியோர் அறிமுகப்படுத்திய ஐதரோபுளோரிக்கமில (Hydrofluoric acid) முறை சிலிக்கேட்டுகளை கரைப்பதில் பெரிதும் உதவுகிறது.[8] கன்னர் எர்ட்மன் (Gunner Erdtman) பயன்படுத்திய அசிடிக்அமில பகுப்பாய்வு (Acetolysis) முறை மகரந்தத்தின் உட்புறப் பொருட்களை நீக்குவதற்குப் பயன்படுகிறது.[9] இம்முறையில் அசெடிக் அன்ஹைட்ரைட்டு (Acetic anhydride) மற்றும் கந்தக அமிலம் 9:1 என்ற விகிதத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த வேதியியல் முறைகள் கவனமாக கையாளப்படவேண்டும். ஏனென்றால், குறிப்பாக ஐதரோபுளோரிக்கமிலம் நம்முடைய தோலில் ஊடுருவி நம் எலும்பை அரிக்கும் அதிசக்தி வாய்ந்தது.[10]. குறிப்புதவி நூல்கள்
|
Portal di Ensiklopedia Dunia