மகளிர், குழந்தைகள் மேம்பாடு மற்றும் சமூக நலத்துறை, மேற்கு வங்காளம்
மகளிர், குழந்தைகள் மேம்பாடு மற்றும் சமூக நலத்துறை, மேற்கு வங்காளம் என்பது மேற்கு வங்காள அரசின் துறைகளில் ஒன்றாகும். அம்மாநிலத்தின் பெண்கள், குழந்தைகள் மற்றும் சமூக நலன் மேம்பாட்டிற்கும் அதன் திட்டங்களுக்கும் இத்துறையே பொறுப்பாகும்.[1]
அமைச்சர்கள் பட்டியல்
அறிமுகம்மேற்கு வங்காள மாநிலத்தில் நிலவும் வறுமையை எதிர்த்துப் போராடுவதற்கும், அம்மாநிலத்தில் நிலையான மற்றும் சமமான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் மேற்கு வங்காள அரசாங்கத்தின் பரந்த மூலோபாயத்தில் இந்த பெண்கள் மேம்பாடு மற்றும் சமூக நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. வறுமை, கல்வியறிவின்மை மற்றும் வளங்களுக்கான சமமற்ற அணுகல் ஆகியவை அம்மாநிலத்தில் நிலவிவரும் தற்கால பிரச்சனைகளாகும். விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு - குழந்தைகள் மற்றும் மிகவும் வயதானவர்கள், சமூகம் அல்லது குடும்ப ஆதரவு இல்லாமல் சமூகத்தின் விளிம்புகளில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், வீடற்ற நபர்கள் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள்வர்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை வழங்கவும் இத்துறை உறுதிபூண்டுள்ளது. துறை கட்டுப்பாடு மற்றும் பிரிவுகள்இயக்குநரகம் மற்றும் இதர பிரிவுகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia