மகளிர் கல்லூரி, கொல்கத்தா
மகளிர் கல்லூரி, கொல்கத்தா என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் 1937 [1] ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு இளங்கலை மற்றும் முதுகலை மகளிர் கல்லூரியாகும். உயர் கல்வியின் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் என்ற குறிக்கோளுடன் நிறுவப்பட்ட இக்கல்லூரியானது கொல்கத்தா பல்கலைக்கழகத்தால் இணைக்கப்பட்டுள்ளது [2]. வரலாறுஇங்கிலாந்தின் இலண்டனில் முதுகலையும், முனைவர் பட்டமும் பெற்றுவிட்டு இந்தியா திரும்பிய திரேந்திர லால் தே என்பவரால் ஜூலை 2, 1937 துவங்கப்பட்ட இக்கல்லூரி, டிசம்பர் 1982 ஆம் ஆண்டில் தான், கல்லூரி தற்போது இயங்கும் பி-29, க்ஷிரோட் வித்யாவினோத் அவென்யூ,பாக்பஜார்,700003 என்ற கட்டிடத்திற்க்கு மாறியது. அதுவரை பல்வேறு தற்காலிக இடங்களிலேயே இயங்கி வந்துள்ளது.[3] துறைகள்அறிவியல் பிரிவு
கலைப் பிரிவு
அங்கீகாரம்கொல்கத்தாவின் இந்த மகளிர் கல்லூரிக்கு தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (என்ஏஏசி) பி + + தரத்தை வழங்கி அங்கீகரித்துள்ளது.மேலும் பல்கலைக்கழக மானியக் குழுவினாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[4] மேலும் காண்க
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia