மகளிர் நலம்(Women's health) என்பது பெண்களின் நலவாழ்வைக் குறிக்கிறது. மகளிர் நலம் பலவகைகளில் ஆடவர் நலத்தில் இருந்து வேறுபடுகிறது. மகளிர் நலம் மக்களின் நலவாழ்வை மறைமுகமாகச் சுட்டும் சுட்டியாகும். உலக நலவாழ்வு நிறுவனம் நலவாழ்வை "நோயற்ற வாழ்வாகக் கூறாமல், முழு உடல், மன, சமூக நலவாழ்வாக " வரையறுக்கிறது. இது குறிப்பாகவும் பொதுவாகவும் மகளிர் இனப்பெருக்க நலவாழ்வைக் குறிப்பதாகக் கருதினாலும், பல குழுக்கள் மகளிரின் ஒட்டுமொத்த நலவாழ்வைக் குறிக்கும் அகல்விரிவான வரையறைக்காக வாதாடிவருகின்றனர். வளரும் நாடுகளைப் பொறுத்தவரையில் ஆண், பெண் நலவாழ்வு வேறுபாடுகள், பெண்கள் எதிர்கொள்ளும் இடர்கள், பட்டறிவைச் சார்ந்து மேலும் கூர்மையடைகின்றன.
தொழில்வளர்ச்சியடைந்த நாடுகளில் பெண்கள் பாலின இடைவெளியைக் குறைத்து ஆண்களை விட கூடுதல் வாழ்நாள் வாழ்ந்தாலும் நலவாழ்வின் பல களங்களில் ஆண்களைவிட பின்னடைவாகவே உள்ளனர். அவர்கள் தம் வாழ்நாலில் விரைவிலேயே நோய்வாய்ப்பட்டு நலங்குறைவாகவே வாழ்கின்றனர். ஏழ்மை, வேலைவாய்ப்பு, குடும்பப் பொறுப்புகள் போன்ற காரணிகளால் பாலினம் மகளிர் வாழ்வில் உயிரியல் காரணியாக மட்டும் நிலவாமல் முதன்மையான சமுகக் காரணியாகத் திகழ்கிறது. பெண்கள் எப்போதும் சமூக, பொருளியல் அதிகாரநிலையில் நெடுங்காலமாகவே ஆண்களை விட பின்னடைந்தே உள்ளனர். இந்நிலை பெண்கள் தம் உடல்நலம் உள்ளிட்ட வாழ்க்கைத் தேவைகளை அடைவதை மிகவும் கட்டுப்படுத்துகிறது. வளரும் நாடுகளில் இந்நிலை, குறிப்பாக மகளிர் நலத்தைப் பொறுத்து, மேலும் சீர்கேடாகிறது.
பெண்களின் இனப்பெருக்க, பாலியல் நலம் ஆண்கள் நலத்தோடு ஒப்பிடும்போது மிகவும் தெளிவாக வேறுபடுகிறது. வளர்ச்சியுற்ற நாடுகளிலும் கருவுறுதலும்குழந்தை பிறப்பும் பெண்களுக்குக் கணிசமான இடர்களை உருவாக்குகின்றன. ஒராண்டில் கால் மில்லியன் தாயார் இறக்கின்றனர். இந்த இடைவெளி வளரும் நாடுகளில் வளர்ச்சியுற்ற நாடுகளில் மேலும் பேரளவாக அமைகிறது. இதயக் குழலடைப்பு போன்ற இனப்பெருக்கம் சாரா நோய்கள், கருவுறல் சார்ந்த இறப்பையும் நோய்நலிவையும் கூட்டுகின்றன. மேலும் பேற்று முன்காலக் குளிர்காய்ச்சலையும் ஏற்படுத்துகின்றன. பாலினவழிக் கடத்தல் நோய்கள் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இந்நோய்கள் தரிடம் இருந்து சேய்க்குக் கடத்தப்படுவதால், இவை இறந்தநிலைப் பிறப்பையும் புத்திளங்குழவி இறப்பையும் இடுப்பு அழற்சி நோயையும்கருவள அழிவையும் விளைவிக்கின்றன. கருத்தடை, கருக்கலைப்பு அணுகலுக்கான போராட்டம், திட்டமிடாத கருவுறல், வன்கலவி (விரும்பாத உடலுறவு) போன்றவை கருவள அழிவுக்கான மற்ற காரணிகளைவிட பெண்களுக்குக் கூடுதலான சுமைகளைத் தருகின்றன.
பெண்களின் இனப்பெருக்க, பாலியல் நலம் ஆண்கள் நலத்தோடு ஒப்பிடும்போது மிகவும் தெளிவாக வேறுபடுகிறது. வளர்ச்சியுற்ற நாடுகளிலும் கருவுறுதலும் குழந்தை பிறப்பும் பெண்களுக்குக் கணிசமான இடர்களை உருவாக்குகின்றன. ஒராண்டில் கால் மில்லியன் தாயர் இறகின்றனர். இந்த இடைவெளி வளரும் நாடுகளில் வளர்ச்சியுற்ற நாடுகளில் மேலும் பேரளவாக அமைகிறது. இதயக் குழலடைப்பு போன்ற இனப்பெருக்கம் சாரா நோய்கள், கருவுறல் சார்ந்த இறப்பையும் நோய்நலிவையும் கூட்டுகின்றன. மேலும் பேற்று முன்காலக் குளிர்காய்ச்ச்சலையும் ஏற்படுத்துகின்றன. பாலினவழிக் கட்த்தல் நோய்கள் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இந்நோய்கள் தரிடம் இருந்து சேய்க்குக் கடத்தப்படுவதால், இவை இறந்தநிலைப் பிறப்பையும் புத்திளங்குழவி இறப்பையும் கூபக அழற்சி நோயையும் கருவள அழிவையும் விளைவிக்கின்றன. கருத்தடை, கருக்கலைப்பு அணுகலுக்கான போராட்டம், திட்டமிடாத கருவுறல், கற்பழிப்பு (விரும்பாத உடலுறவு) போன்றவை கருவள அழிவுக்கான மற்ற காரணிகளைவிட பெண்களுக்குக் கூடுதலான சுமைகளைத் தருகின்றன.ளிதயக் குழலடைப்பு, புற்றுநோய், நுரையீரல் நோய்கள் போன்ற இரப்பை விளைவிக்கும் காரணிகளின் வீதங்கள் பொதுவாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒத்திருந்தாலும், இவற்றைப் பொறுத்த பென்களின் பட்டறிவுகளும் தக்கங்களும் வெறுபட்டே அமைகின்றன. பெண்களின் இறப்பு மற்ற புற்றுகளைவிட நுரையீரல் புற்றால் பேரளவாக அமைகிறது. அதர்கடுத்த நிலைகளில் முலைப்புற்றும் பெருங்குடல்-மலக்குடல் புற்றும் அண்டகப்புற்றும் கருப்பைப் புற்றும் குருப்ப்பைக் கழுத்துப் புற்றும் அமைகின்றன. பொதுவாக, புகைத்தல் புற்றுக்கான பெருங்காரணியாக இருந்தாலும், இது புகைக்காத ஆண்களை விட புகைக்காத பெண்களுக்கு மும்மடங்கு இடரைத் தருகிறது. வளர்ந்த நாடுகளில் பெண்களுக்கு முலைப்புற்றே மிகவும் பரவலாகவும் நாட்பட்ட நோயாகவும் அமைகிறது என்றாலும் வளரும் நாடுகளில் பெண்களுக்கு கருப்பைக் கழுத்துப் புற்றே பாலியலாக கடத்தப்படும் மனிதப் பாப்பிலோமா நச்சுயிரியால் பரவலாக ஏற்படுகிறது. இதற்கு மனிதப் பாப்பிலோமா தடுப்பூசியும் நோயாளிகளைத் தனிப்படுத்தலும் இந்நோயைக் கட்டுபடுத்த உதவுகின்றன. அடுத்தபடியாக பெண்களுக்கு நலவாழ்வுச் சிக்கலை உருவாக்குபவையாக, இதயக்குழல் அடைப்பும் மனவிறுக்கமும் அறிதிறன் குறைவும் என்புப் புரையாதலும் நிறவெளிர் (சோகை) நோயும் அமைகின்றன. பெண்களின் நலவாழ்வை மேம்படுத்துவதில் அமையும் பெருந்தடங்கல் ஆராய்ச்சி வெளியில் மகளிர் நலம் பற்ரிய கரிசனை குறைவாக அமைதலேயாகும். இது ச்முகத்தில் நிலவும் பாலினப் பாகுபாட்டால் விளைவதாகும். இந்தப் போக்கு அமெரிக்காவிலும் மேற்கத்திய் நாடுகளிலும் மகளிர் நல ஆராய்ச்சிக்கான செந்தகவு மையங்களை உருவாக்குவதால் மட்டுபடுத்தப்படுகிறது. மேலும் இது மகளிர் நல முன்முயற்சியாக மேற்கொள்ளப்படும் பேரளவு மருத்துவ மனை ஆய்வாலும் குறைக்கப்படுகிறது.
வரையறைகளும் புலமைப்பரப்பும்
பெண்களின் நலவாழ்வும் நோய்த் தாக்கமும் தனித்த உயிரியல் கூறுபாடுகள், உயிரியல், சமூகக் காரணிகளால் ஆண்களின் நலவாழ்வு, நோய்ப்பாடுகளில் இருந்து வேறுபடுகின்றன. உயிரியல் வேறுபாடுகள் புறத்தோற்ற வகைமையில் இருந்து உயிர்க்கல உயிரியல் வரை வேறுபட்டு பெண்களுக்கென்றே உரிய தனித்த நோயாக்க இடர்களைக் கொண்டுள்ளன.[1] உலக நலவாழ்வு நிறுவனம் நலவாழ்வை "நோயற்ற வாழ்வாகவே இயல்பு வலிமை இழப்பாகவோ கூறாமல், முழு உடல், மன, சமூக நலவாழ்வாக " வரையறுக்கிறது".[2] மகளிர் நலம் குறிப்பிட்ட மக்கள்தொகை நலத்துக்கான முதன்மைச் சுட்டியாகும்.[3]
மகளிர் நலம் "ஒட்டுபோட்டுத் தைத்த துணி வேலைபோல" அமைவதாகக் விவரிக்கப்படுகிறது.[4] பெண்களின் நலம் சார்ந்த பல சிக்கல்கள் தாய், சேய் நலம், பிறப்புறுப்பு நலம், நெஞ்சக நலம், அகச்சுரப்பு மண்டல நலம், மாத விடாய், கருத்தடை, மாத விடாய் நிறுத்தம் உள்ளிட்ட இனப்பெருக்க நலத்தோடு தொடர்புற்றிருந்தாலும், மகளிர் நலம் சார்ந்த அனைத்துக் களங்களின் விரிவும் வற்புறுத்தப்படுகிறது.[5]தூலக நலவழ்வு நிறுவனம் மகளிர் நலத்தில் மிகவும் வற்புறுத்தப்ப்படும் இனப்பெருக்க நலத்துக்கான கூடுதல் முனைப்பே அனைத்து மகளிர் நலம் நன்கும் நல்லதரத்தோடும் அமைவதற்கு இடைஞ்சலாக அமைவதாகக் கூறுகிறது.[1] ஆண், பெண் இருபாலாரையும் தாக்கும் இதயக் குழலடஇப்பு நோய், என்பு புரையாதல் ஆகியவையும், பெண்களைத் தாக்கும்போது வேறுபாடான வகையிலேயே அமைகின்றன.[6]மகளிர் நலம் சமூக, பொருளியல், உயிரியல் காரணிகளும் பாலினப் பாகுபாடுடைய மருத்துவ அணுகுமுறையும் சார்ந்த சூழல்களை மட்டுமன்றி பல்வேறு மறைமுகச் சூழல்களையும் சந்திக்க வேண்டியதாகவும் அமைகிறது.[6] உலகளாவிய நிலையில் நிலவும் பெண்களுக்கு எதிரான பாலினப் பாகுபாடு அவர்களை வளர்ச்சியில் மேம்பாடுறாதவண்ணம் தடுப்பதால் மகளிர் நலம் சார்ந்த அக்கறை மிகவும் இன்றியமையாததாகிறது.[1]
அமெரிக்க மகளிர் நல ஆராய்ச்சிக் கழகம் போன்ற பல நலவாழ்வு, மருத்துவ ஆய்வுசார்ந்த நலம்விரும்பிகள் ஆண், பெண் பாலின வேறுபாட்டை காட்டும் பெண் உடற்கூற்றை மட்டுமே கருதாத, இந்த அகல்விரிவான வரையறையை ஏற்கின்றனர் . ஆண்களை விட பெண்களுக்கு கூடுதலான நல அக்கறை காட்டவேண்டிய நிலைமை அமைகிறது. இதற்கான சூழல் ஓரளவு இனப்பெருக்க, பாலியல் நலத்தேவைகளாலும் நாட்பட்ட இனப்பெருக்கம் சாராத நோய்களாகிய இதயக் குழலடைப்பு, புற்றுநோய், மனநோய், நீரிழிவு, என்புப் புரையாதல், போன்ற நோய்களாலும் ஏற்படுகிறது.[7] மற்றொரு முதன்மையான கண்ணோட்டமாக, கருவுறுதல் முதல் முதுமையுறுதல் வரையிலான மகளிர் வாழ்க்கைச் சுழற்சியும் அகவை முதிர்வு நிலைமாற்றங்களும் நலமும் போன்றவற்றை எண்ணிப் பார்த்தல் அமைகிறது. இந்த வாழ்க்கைச் சுழற்சி சார்ந்த கண்ணோட்டத்தை உலக நலவாழ்வு நிறுவனம் முதன்மையானதாகக் கருதுகிறது.[8][9][10]
Arbyn, M.; Castellsague, X.; de Sanjose, S.; Bruni, L.; Saraiya, M.; Bray, F.; Ferlay, J. (6 April 2011). "Worldwide burden of cervical cancer in 2008". Annals of Oncology22 (12): 2675–2686. doi:10.1093/annonc/mdr015. பப்மெட்:21471563.
Friedman, Arnold J.; Chen, Zhao; Ford, Patricia; Johnson, Cynda Ann; Lopez, Ana Maria; Shander, Aryeh; Waters, Jonathan H.; van Wyck, David (December 2012). "Iron Deficiency Anemia in Women Across the Life Span". Journal of Women's Health21 (12): 1282–1289. doi:10.1089/jwh.2012.3713.
Gahagan, Jacqueline; Gray, Kimberly; Whynacht, Ardath (2015). "Sex and gender matter in health research: addressing health inequities in health research reporting". International Journal for Equity in Health14 (1): 12. doi:10.1186/s12939-015-0144-4.
Gahagan, Jacqueline (15 August 2016). "Commentary on the new sex and gender editorial policy of the Canadian Journal of Public Health". Canadian Journal of Public Health107 (2): 140. doi:10.17269/cjph.107.5584. Lay summary – Jon Tattrie. Canadian Journal of Public Health tells researchers to address sex, gender in trials: Research 'excluding 50 per cent of the population' isn't best return for taxpayers, says Jacqueline Gahagan. Canadian Broadcasting Corporation News: Nova Scotia (7 December 2016).
Geller, Stacie E.; Adams, Marci Goldstein; Carnes, Molly (December 2006). "Adherence to Federal Guidelines for Reporting of Sex and Race/Ethnicity in Clinical Trials". Journal of Women's Health15 (10): 1123–1131. doi:10.1089/jwh.2006.15.1123.
Kim, Esther S.H.; Carrigan, Thomas P.; Menon, Venu (August 2008). "Enrollment of Women in National Heart, Lung, and Blood Institute-Funded Cardiovascular Randomized Controlled Trials Fails to Meet Current Federal Mandates for Inclusion". Journal of the American College of Cardiology52 (8): 672–673. doi:10.1016/j.jacc.2008.05.025.
Koplan, Jeffrey P; Bond, T Christopher; Merson, Michael H; Reddy, K Srinath; Rodriguez, Mario Henry; Sewankambo, Nelson K; Wasserheit, Judith N (June 2009). "Towards a common definition of global health". லேன்செட்373 (9679): 1993–1995. doi:10.1016/S0140-6736(09)60332-9. பப்மெட்:19493564.
Kozhimannil, Katy Backes; Abraham, Jean M.; Virnig, Beth A. (March 2012). "National Trends in Health Insurance Coverage of Pregnant and Reproductive-Age Women, 2000 to 2009". Women's Health Issues22 (2): e135–e141. doi:10.1016/j.whi.2011.12.002.
Nour, Nawal M. (2014). "Global women's health – A global perspective". Scandinavian Journal of Clinical and Laboratory Investigation74: 8–12. doi:10.3109/00365513.2014.936673., in (Bergmeyer 2014)
Pimenta, Jeanne M; Galindo, Claudia; Jenkins, David; Taylor, Sylvia M (21 November 2013). "Estimate of the global burden of cervical adenocarcinoma and potential impact of prophylactic human papillomavirus vaccination". BMC Cancer13 (1). doi:10.1186/1471-2407-13-553.
Royal Thai College of Obstetricians and Gynaecologists; JHPIEGO Corporation Cervical Cancer Prevention Group (March 2003). "Safety, acceptability, and feasibility of a single-visit approach to cervical-cancer prevention in rural Thailand: a demonstration project". லேன்செட்361 (9360): 814–820. doi:10.1016/S0140-6736(03)12707-9.
Bruinvels, G; Burden, R J; McGregor, A J; Ackerman, K E; Dooley, M; Richards, T; Pedlar, C (6 June 2016). "Sport, exercise and the menstrual cycle: where is the research?". British Journal of Sports Medicine: bjsports-2016-096279. doi:10.1136/bjsports-2016-096279.
Darroch, Jacqueline E; Singh, Susheela (May 2013). "Trends in contraceptive need and use in developing countries in 2003, 2008, and 2012: an analysis of national surveys". லேன்செட்381 (9879): 1756–1762. doi:10.1016/S0140-6736(13)60597-8. பப்மெட்:23683642.
Forman, David; de Martel, Catherine; Lacey, Charles J.; Soerjomataram, Isabelle; Lortet-Tieulent, Joannie; Bruni, Laia; Vignat, Jerome; Ferlay, Jacques et al. (November 2012). "Global Burden of Human Papillomavirus and Related Diseases". Vaccine30: F12–F23. doi:10.1016/j.vaccine.2012.07.055.
Ganatra, Bela; Tunçalp, Özge; Johnston, Heidi Bart; Johnson Jr, Brooke R; Gülmezoglu, Ahmet Metin; Temmerman, Marleen (1 March 2014). "From concept to measurement: operationalizing WHO’s definition of unsafe abortion". Bulletin of the World Health Organization92 (3): 155–155. doi:10.2471/BLT.14.136333.
Hansen, Christian Holm; Schellenberg, Joanna R M Armstrong (January 2016). "Modest global achievements in maternal survival: more focus on sub-Saharan Africa is needed". லேன்செட்387 (10017): 410–411. doi:10.1016/S0140-6736(16)00099-4. பப்மெட்:26869551.
WHO (1948). "WHO definition of Health". Archived from the original(Preamble to the Constitution of the World Health Organization as adopted by the International Health Conference, New York, 19–22 June 1946; signed on 22 July 1946 by the representatives of 61 States (Official Records of the World Health Organization, no. 2, p. 100) and entered into force on 7 April 1948.) on 7 July 2016. Retrieved 6 July 2016.{{cite web}}: CS1 maint: ref duplicates default (link), in (WHO 2016)