மகாராட்டிரதேசம்

மகாராட்டிரதேசம் கொங்கணதேசம் முதல் மேற்கு கடற்கரை ஓரமாக கோகர்ணம் வரையிலும், யவனதேசத்திற்கு மேற்கிலும், தண்டகாரண்யம்,பஞ்சவடி, இவைகளின் தென்மேற்கிலும் பரவி நடுவில் சதுரமான பூமியாய் இருந்த தேசம்.[1]

இருப்பிடம்

ஆந்திரதேசம் போலவே இத்தேசத்தின் பூமி பாதி நல்ல பூமியாகவும், பாதி பூமி மண்ணும், கல்லும், மணலும், மேடு, பள்ளங்கள் இல்லாமல் சம்மாகவே இருக்கும். இந்த தேசத்தில் வருடத்தில் 8 மாதம் மழை பெய்து கொண்டே இருக்கும்.[2]

மலை, காடு, விலங்குகள்

இந்த தேசத்தின் வடக்கில் பஞ்சவடியும்ருசுயமுகமலையும், மால்யவான் மலையும் அதன் மலைத் தொடர்களும், சிறு, சிறு குன்றுகளும், சிறு, சிறு காடுகளும் செழிப்பான நல்ல பூமியும் இருக்கும். இத்தேசத்தில் புன்செய் பயிர்களே அதிகமிருக்கும்.

நதிகள்

மகாராட்டிரதேசத்தின்வடபாகம் முழுவதும் யவனதேசத்தின் தெற்குபாகத்தில் மால்யவான் மலையிலிருந்து கிழக்கு நோக்கி ஓடிவரும் துங்கவேணா நதி மகாராட்டிரதேசத்தை செழிக்க வைக்கின்றது.[3]

சிறப்பு

இந்த மகாராட்டிரதேசத்தில் பஞ்சவடி, கிஷ்கிந்தை, மகாபரபுரம், மகாபலேசுவரம், பரதிஷ்டானம் போன்ற நகரங்கள் இராமாயண காலத்தில் சிறப்புற்று இருந்தன.

கருவி நூல்

சான்றடைவு

  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  2. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 260 -
  3. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்]] - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 261 -
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya