இவரின் வரலாறு பற்றி தெளிவான வரையறைகள் ஏதுமில்லை. இவரைப்பற்றிய நூல்களின் படி இவரின் இயற்பெயர் நாகராஜ்[1][2] . மகாவதார பாபா என்ற பெயர் இவரது சீடரான லாகிரி மகரிஷி என்றவரால் சூட்டப்பட்டது.[3] இந்த பாபா போகர் என்ற சித்தரின் சீடர் என்று கூறப்படுகிறது. இவரே கிருஷ்ணர் என்னும் அவதாரம் எடுத்தாக சிலரால் கூறப்படுகிறது.[4] இவர் தமிழ்நாட்டில் உள்ள பரங்கிப்பேட்டையில் பிறந்தார்.[5][6] இவரே க்ரியா யோகம் என்னும் யோக முறையை கண்டறிந்தவர். மேலும் இவருக்கு ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே சாவகட்டுப்பாளையம் என்ற ஊரில் ஓர் தனி ஆலயம் உள்ளது
திரைப்படம்
தமிழில் ரஜினிகாந்த் நடித்த பாபா என்னும் திரைப்படத்தில் ரஜினிகாந்த் முற்பிறவியில் பாபாவிற்கு சீடராக இருந்தது போல் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பொது நம்பிக்கை
(மகா தெய்வீகபாபாஜி இப்போதும் இமாலயா குகைகளில் வாழும் கைலாஷ் மலைகளில் அவரை காணப்பட்டதாக யோகிகள் சிலர் கூறுகின்றனர்..)