மகா மிருத்தியுஞ்சய மந்திரம்

மகா மிருத்தியுஞ்சய மந்திரம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த பஞ்ச மந்திரங்களில் ஒன்றாகும். இம்மந்திரமானது சிவபெருமானால் திருமாலுக்கு முதலில் கூறப்பட்டது என்று மகாபுராணங்களில் ஒன்றான சிவமகாபுராணம் கூறுகிறது.

இம்மந்திரமானது இறவாமையை தரக்கூடியது எனவும் கூறப்படுகிறது. இம்மந்திரத்தின் மூலமே மார்க்கண்டேயர் யமனிடமிருந்து விடுபட்டார் எனவும், தட்சனின் சாபத்திலிருந்து சந்திரன் மீள இம்மந்திரமே உதவியது எனவும் இந்து நூல்கள் கூறுகின்றன.

கரிக்குருவி

மதுரை பொற்றாமரைக் குளத்தில் நீராடி இறைவனை வழிபட்ட ஒரு கரிக்குருவியின் செயல்பாட்டால் மகிழ்ந்த சிவபெருமான், இம்மந்திரத்தினை அக்குருவியிடம் கூறினார். அதனால் சிற்றின்பம் அகன்று, இக்குருவி வீடுபேறு பெற்றது. இவ்வரலாறு வலிவல்லம் மனத்துணைநாதர் கோயிலின் வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. [1]

இவற்றையும் காண்க

ஆதாரங்கள் மேற்கோள்கள்

  1. http://temple.dinamalar.com/New.php?id=236

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya