மகி![]() ![]() மகி என்பது மகரச் சங்கராந்திக்கான பஞ்சாபி மொழிப் பெயராகும். இது குளிர்கால அறுவடைப் பண்டிகையாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது .[1]மகி மக முதல் நாளில் பஞ்சாப், இமாச்சலப்பிரதேசம், அரியானா பகுதிகளில் பஞ்சாபியர் கால அட்டவணைப்படி கொண்டாடப்படுகிறது. இது பண்பாட்டுப் பண்டிகையாக மட்டுமன்றி பருவக்கால, சமயப் பண்டிகையாகவும் விளங்குகிறது. இது வேளாண்மைப் புத்தாண்டு தொடங்கும் பகல்வெளிச்ச மிக்க நாட்களில் விளையாட்டுகள் நிகழும் பண்டிகையாகவும் திகழ்கிறது. பண்பாட்டுத் திருவிழாபருவக் காலத் திருவிழாமகி பகல் வெளிச்சம் மிகுவதைக் குறிப்பிடுகிறது .[2] இது குளிர்காலக் கதிர்த்திரும்பலில் ஏற்படும். இது பெருநாள் எனும் பொருள் உள்ள பாரா தின் என வழங்கும். இது பின்பனிக்காலத் (சிசிர்பருவத்)தொடக்கமும் ஆகும் [3]. சிசிர் பருவம் குளிர்காலத்தின் இரண்டாம் பகுதியான பின்பனிக்காலம் ஆகும். எனவே மகி பருவக்காலப் பண்டிகையும் ஆகும்.[4] மரபுகள்உணவுஇந்தியாவின் மற்ற பகுதிகளைப்போல குளிர்காலத்தில் பஞ்சாபிலும் இமாச்சலப் பிரதேசத்திலும் ஃஆர்யானாவிலும் நெல் அறுவடை நிகழ்வதில்லை.[5] என்றாலும் நெல் அறுவடை இலையுதிர் காலத்தில் நடைபெறுகிறது. இந்த அறுவடை மகியன்று கொண்டாடப்படுகிறது. எனவே இன்று பாற்கஞ்சி காய்ச்சிப் பருகப்படுகிறது . குளிர்கால விளைச்சலான கரும்புச் சாறு அருந்தப்படுகிறது. இது கீர் என வழங்குகிறது. "Poh ridhi, Magh khadi" என்றொரு பஞ்சாபிப் பழமொழி உண்டு. இதன் பொருள் போ மாதப் பாற்கஞ்சி அடுத்த மகி மாத முதல் நாளில் பருகப்படுகிறது என்பதாகும். பஞ்சாபின் சில பகுதிகளில் கிச்சடி வெல்லமும் கரும்புத் துண்டும் கலந்து உண்ணப்படும்.[2]இவை எல்லாமே குளிர்கால அறுவடைப் பொருள்களாகும். எள்கலந்த தின்பண்டங்களும் மரபாக உண்ணப்படுவதுண்டு. இவற்றோடு, வசந்தப் பட்டப் பண்டிகையின்போது கவிநிற அரிசியுணவு மரபாக ஆர்வத்தோடு சேர்த்துக்கொள்ளப்படுகிறது. மகி விருந்து (மோகு-மகி)பஞ்சாபின் சில பகுதிகளில் இளம்பெண்கள் மூத்த பெண்டிரிடம் விருந்து கேட்பர். இது மகி விருந்து (மோகு-மகி) எனப்படும். இந்நிகழ்வு மகியன்று காலையின் நிகழும்.[2] The only song sung on this occasion is:
மொழிபெயர்ப்பு
(இங்கு பஞ்சாபிச் சொல்லான தாடி விருந்தளிக்கும் எதிர்பெண்ணின் முகம், கன்னம் குறிக்கும்). மகி விழாக் காட்சிகள்மரபாக மகியன்று பல பண்பாட்டுக் காட்சிகள் நிகழும்.[6][7]மக்கள் குழுமிப் பார்க்க பலவிழாக் காட்சிகளாக, கபட்டி, மற்போர், பஞ்சாப் பகுதி விளையாட்டுகள், இந்திய விளையாட்டுகள் போன்றவை நிகழும்.
முக்த்சார் போர்ப் பெருவிழா![]() மகியன்று முக்த்சார் நகரில் மிகப்பெரிய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்படும். இது மகி மேளா எனப்படுகிறது. இதில் சாளி முக்தேவின் போர்க்காட்சி அரங்கேறும். இது வரலாற்றுக் கால முக்த்சார் போர்க் காட்சி ஆகும். [8] இந்நகரிலுள்ள குளத்தில் குளிப்பவர்களுக்கு விடிவு கிட்டுமென நம்பப்படுகிறது.[9] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia