மகுமுத் அகமதிநெச்சாத் (Mahmoud Ahmadinejad, Persian: محمود احمدینژاد, romanized: Mahmūd Ahmadīnežād[4][5]; பிறப்பு: 28 அக்டோபர் 1956)[6][7]ஈரானியத் தேசியவாத அரசியல்வாதி ஆவார். இவர் 2005 முதல் 2013 வரை ஈரானின் 6-ஆவது அரசுத்தலைவராகப் பதவியில் இருந்தார். அவர் தனது கடுமையான கருத்துக்களுக்கும் ஈரானின் அணுவாயுதமயமாக்கலுக்கும் பெயர் பெற்றவர். நாட்டின் பழமைவாத அரசியல் குழுக்களின் கூட்டணியான இசுலாமிய ஈரானின் கட்டுநர்களின் கூட்டணியின் முக்கிய அரசியல் தலைவராகவும் இருந்தார், 2003 முதல் 2005 வரை தெகுரானின் நகர முதல்வராகப் பணியாற்றினார், இவரது முன்னோடிகளின் பல சீர்திருத்தங்களை மாற்றினார்.
ஏழைப் பின்னணியில் இருந்து ஒரு பொறியியலாளராகவும் பேராசிரியராகவும் பணியாற்றிய அகமதிநெச்சாத்,[8]ஈரானியப் புரட்சிக்குப் பிறகு, ஒற்றுமையை வலுப்படுத்தும் அலுவலகத்தில் சேர்ந்தார்.[9] 1993-இல் ஒரு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார், 1997-இல் அரசுத்தலைவர் முகமது கத்தாமியின் தேர்தலுக்குப் பிறகு ஆசிரியர் பணிக்குத் திரும்பினார்.[10][11] தெகுரானின் நகரப் பேரவை அவரை 2003-இல் நகர முதல்வராகத் தேர்ந்தெடுத்தது.[12] முந்தைய மிதமான முதல்வர்களின் சீர்திருத்தங்களை மாற்றியமைத்து, மதரீதியான கடுமையான போக்கை எடுத்தார்.[13] இவரது 2005 அரசுத்தலைவர் தேர்தல் பரப்புரையை அடுத்து, இருசுற்று வாக்கெடுப்பில் 62% தேர்தல் வாக்குகளைப் பெற்று, 2005 ஆகத்து 3 அன்று அரசுத்தலைவரானார்.[14][15]
குறிப்புகள்
↑At the time, Revolutionary Guards rejected official ranks for its members and commanders were simply referred to with honorifics such as "brother" or "pasdar" (guard).[3]
↑ 2.02.1Ehteshami, Anoushiravan; Zweiri, Mahjoob (2007), Iran and the Rise of Its Neoconservatives: The Politics of Tehran's Silent Revolution, I.B.Tauris, p. 55, ISBN978-0857713674